இந்தியா பற்றி எரிய காரணம் திமுக:- ஸ்டாலின் பெயரில் போலி செய்தி

அரசியல் | Politics திமுக

‘’இந்தியா பற்றிய எரிய காரணம் திமுக,’’ என்று மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறி பகிரப்படும் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

Kishore K Swamy என்ற நபர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், மு.க.ஸ்டாலின் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளார். அதில், ‘’இந்தியா முழுவதும் இன்றைக்கு பற்றி எரிவதற்கு காரணம்- திமுக. திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. திமுகவை பற்றி ஸ்டாலினே விமர்சித்தது போல இதன் அர்த்தம் உள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது உண்மையா என்ற சந்தேகத்தில் சன் நியூஸ்-ன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் (@SunNews Tamil) தகவல் தேடினோம். அப்போது, மேற்குறிப்பிட்ட நியூஸ் கார்டில் இருப்பதுபோன்ற ஸ்டாலின் புகைப்படத்துடன் மூன்று செய்தி விவரங்கள் கிடைத்தன. 

இந்த 3 நியூஸ் கார்டையும் ஆய்வு செய்ததில், நாம் சந்தேகப்படும் நியூஸ் கார்டை ஒத்ததாக உள்ள நியூஸ் கார்டு கிடைத்தது. 

Facebook claim link Archived Link 

இதன்படி, ‘’இந்தியா முழுவதும் இன்றைக்கு பற்றி எரிவதற்கு காரணம் அதிமுக,’’ என்று மு.கஸ்டாலின் விமர்சித்ததாகக் கூறி சன் நியூஸ் பகிர்ந்த செய்தியில், அ என்பதை நீக்கிவிட்டு, திமுக என மாற்றியுள்ளனர் என்று தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் தவறான தகவல் உள்ளதென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:இந்தியா பற்றி எரிய காரணம் திமுக:- ஸ்டாலின் பெயரில் போலி செய்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False