
‘’ராமர் கோயில் கட்டும் இடத்தில் டைம் கேப்சூல் பதிக்கப்படுகிறது,’’ என்று கூறி பரவி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

ஜூலை 28, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ எதிர்கால சந்ததிக்காக..!! அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’ 👌👌,’’ என்று எழுதியுள்ளனர். இது உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் கடந்த ஜூலை 27 முதலாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. முதலில், இதனை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்து.

இதனை பார்த்ததும் மற்ற ஆங்கில முன்னணி ஊடகங்களும் செய்தி வெளியிட தொடங்கின.
இதைப் பார்த்து, தமிழ் செய்தி ஊடகங்களும் இந்த தகவலை பதிப்பித்தன. அவற்றில் தினமலர், பாலிமர், தினத்தந்தி போன்ற ஊடகங்கள் முதன்மையானவை ஆகும்.
ஆனால், இந்த செய்தி வெளியான அடுத்த நாளே, இதுபற்றி அயோத்தி ராமர் கோயில் கட்டுகிற டிரஸ்ட் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுவிட்டது.

இதுபற்றி TimesNow News ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதேபோல, நக்கீரன், ஜீ நியூஸ் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) ஜூலை 27, 2020 அன்று வெளியான செய்தி தவறானது என்று கூறி, மீண்டும் ஜூலை 28, 2020 பிற்பகலில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றொரு அப்டேட் செய்தியையும் வெளியிட்டுள்ளதாக, தெரியவருகிறது.
2) ஆனால், இதனை முன்னணி தமிழ் ஊடகங்கள் பலவும் அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டன. இதனால், ஏற்கனவே சுற்றில் உள்ள பழைய செய்தியை உண்மை என நம்பி, சாமானிய ஃபேஸ்புக் வாசகர்கள் பகிர தொடங்கியுள்ளனர்.
3) எனவே, ஜூலை 28, 2020 பிற்பகல் முதலாக இந்த செய்தியை பகிர்வது தவறு என கருத்தில் கொள்ளப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:FactCheck: ராமர் கோயில் கட்டும் இடத்தில் டைம் கேப்சூல் பதிக்கப்படுகிறதா?
Fact Check By: Pankaj IyerResult: False
