எனது பெயரில் பரவும் போலி ட்வீட்: ஓமன் இளவரசி மோனா விளக்கம்!

அரசியல் சர்வதேசம்

ஓமன் இளவரசி மோனா இந்திய அரசை கண்டித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாக சில நாட்கள் முன்பாக ஒரு தகவல் பகிரப்பட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook ClaimArchived Link

இதேபோன்ற தகவலை மேலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் அங்கிருந்தபடியே முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்வதாக புகார் எழுந்தது. இதன்பெயரில், சில நாட்கள் முன்பாக, துபாய், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் நாட்டு அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது நாட்டில் வசிக்கும் இந்து மத வெறியர்களை கண்டித்து ட்வீட் வெளியிட்டதாக, பலரும் தகவல் பகிர்ந்தனர். இவை அனைத்தும் இந்திய அரசை வெளிப்படையாகக் கண்டிக்கும் வகையில் இருந்தன. இதனால், இந்தியாவிற்கு சர்வதேச அளவில் பெரும் அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாகவும், அரசியல் கட்சியினர் விமர்சித்தனர். 

இத்தகைய சூழலில், தனது பெயரில் பரவும் ட்வீட்டர் பதிவுகளை நம்ப வேண்டாம் என்றும், இந்திய அரசுடன் நல்ல நட்புறவையே விரும்புகிறேன் என்றும் கூறி ஓமன் இளவரசி மோனா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவரது உண்மையான ட்விட்டர் ஐடி (@MonaFahad13) வேறு ஒன்றாக உள்ளது. 

Omani Princess Mona Twitter PostArchived Link 

இதன்படி, ‘’எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி சிலர் விஷமத்தனமான தகவலை பரப்பியுள்ளனர். அதனை யாரும் நம்ப வேண்டாம். எனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடி லிங்க்கை இங்கே இணைத்துள்ளேன். இதுதவிர ஓமன் அரச விதிமுறைகளை மீறி வேறு எந்த சமூக ஊடக கணக்கையும் நான் பயன்படுத்தவில்லை,’’ என்று இளவரசி மோனா குறிப்பிட்டுள்ளார். 

அவரது ட்வீட்டின் ஆங்கில மொழியாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. 

இதே தகவலை ஓமன் நாட்டிற்கான இந்திய தூதர் Amb Munu Mahawar உறுதிப்படுத்தியுள்ளார். 

Archived Link 

இந்த செய்தியை உண்மைத்தன்மை பரிசோதித்த பின், இந்திய ஊடகங்கள் பலவும் வெளியிட தொடங்கியுள்ளன. அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

ANINews LinkHindustanTimesTOI Link News18 Link

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி ஓமன் இளவரசி பற்றி பகிரப்படும் ட்வீட் போலியானது என உறுதி செய்துள்ளோம். இதனை ஓமன் இளவரசியே நேரடியாக மறுத்துள்ளார். இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை நமது வாசகர்கள் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:எனது பெயரில் பரவும் போலி ட்வீட்: ஓமன் இளவரசி மோனா விளக்கம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False