கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனை நடத்திய திருமாவளவன், சீமான்? அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

“டாடா மினரல் தண்ணீரைக் குடித்துக்கொண்டே கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனை நடந்தது” என்று தொல் திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவலின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தேன்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

விடுதலைச் சிறுத்தைகள் தொல் திருமாவளவன், நாம் தமிழர் சீமான், பாரதி ராஜா, இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் அமர்ந்து பேசும் படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேல் பகுதியில், “டாடா மினரல் தண்ணீரைக் குடித்துக்கொண்டே கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எளிய தமிழ் பிள்ளைகள்” என்று டைப் செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவை, செல்வக்குமார் பி என்பவர் 2020 ஜனவரி 31ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கார்ப்பரேட் நிறுவனங்களை அழிக்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்ற தகவல் அதிர்ச்சியை அளித்தது. கார்ப்பரேட் கலாச்சாரத்தை எதிர்த்து அவ்வப்போது தலைவர்கள் பேசுவது உண்டு… ஆனால், கார்ப்பரேட் நிறுவனத்தை அழிக்கப்போகிறேன் என்று எதுவும் கூறியது இல்லை. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்படி ஏதும் கூறியுள்ளார்களா, ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்களா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் கூகுளில் தமிழகத்தில் கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்ததா, அதில் சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றார்களா என்று தேடினோம். ஆனால், அப்படி எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஒரு சின்ன செய்தி, பதிவு கூட நமக்கு கிடைக்கவில்லை.

Search Link

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த படத்தை 2018 ஜூன் 2ம் தேதி வெளியிட்டிருந்தது தெரியவந்தது. அதில், “கச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான், ஜான்பாண்டியன், அமீர், இராம், வெற்றிமாறன், கோபி நயினார், சுரேஷ்காமாட்சி பங்கேற்பு. கச்சநத்தம் சாதியப் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link

இது தொடர்பான செய்தியையும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்கள்.  மற்ற ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.

naamtamilar.orgArchived Link 1
vikatan.comArchived Link 2
dailythanthi.comArchived Link 3

இதன் மூலம், சாதியப் படுகொலை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் படத்தை எடுத்து, கார்ப்பரேட் ஒழிப்பு கூட்டம் என்று வெளியிட்டிருப்பது உறுதியானது. 

நாம் தமிழர் கட்சி வெளியிட்டிருந்த பதிவில் உள்ள படத்தில் டாடா மினரல் வாட்டர் பாட்டில் இருந்தது. அது எடிட் செய்து வைக்கப்பட்டது இல்லை என்பதும் உறுதியானது. வாட்டர் பாட்டல் உள்ளது என்பதாலேயே கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் என்று குறிப்பிட்டுள்ளது தெரியவந்தது. இதன் அடிப்படையில், உண்மையான படத்துடன், தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு சிறிது உண்மையுடன் தவறான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனை நடத்திய திருமாவளவன், சீமான்? அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False