தந்தி டிவி நிகழ்ச்சியில் திமுக, அமமுக கட்சிகளை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி!

அரசியல் சமூக ஊடகம்

‘’திமுக, அமமுக கட்சிகளை போட்டு கிழி கிழி,’’ என்ற தலைப்பில், தந்தி டிவி நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதை வீடியோவாக ஃபேஸ்புக்கில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:
அன்னே ராஜேந்திர பாலாஜி அன்னே….
இவ்ளோ நாள் எங்க அன்னே இருந்தீங்க….
#DMK
#AMMK
போட்டு கிழி கிழி……

Archived Link

இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காரசாரமாகப் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் பேசும் மேடை, தந்தி டிவியின், மக்கள் மன்ற நிகழ்ச்சி மேடையாகும். அதில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள், அமமுக.,வின் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உண்மை அறிவோம்:
நாம் ஆய்வு செய்யும் வீடியோவில், காமராஜர் சிலைக்கு பின்புறம் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் கோரிக்கை விடுக்கிறார். அதற்கு, பதில் அளித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகிறார். அவர் பேசுகையில், தமிழகத்தில் அப்படி எந்த இடத்திலும் காமராஜர் சிலை அருகில் டாஸ்மாக் கடை இல்லை என்று கூறுகிறார். ஆனால், அல்லம்பட்டி என்ற பகுதியில் உள்ளதாக, காளியம்மாள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினி கூறவே, உடனடியாக, அந்த கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜேந்திர பாலாஜி மேடையிலேயே அறிவிக்கிறார்.

C:\Users\parthiban\Desktop\rajendra balaji 2.png

அதன்பிறகு, திமுக, அமமுக கட்சிகளை காரசாரமாக விமர்சித்து அவர் பேசுகிறார். இதன்படி, இந்த வீடியோவை கூகுளில் தேடிப் பார்த்தோம்.

C:\Users\parthiban\Desktop\rajendra balaji 3.png

அதில், மேற்கண்ட நிகழ்ச்சி, கடந்த மே 4ம் தேதி படம்பிடிக்கப்பட்ட ஒன்று எனவும், இதுபற்றி அப்போதே தந்தி டிவி விரிவான செய்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்தது. அல்லம்பட்டி காமராஜர் சிலைக்குப் பின்புறம் இருந்த டாஸ்மாக் கடையை உடனே மூட நடவடிக்கை எடுத்தமைக்காக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பாராட்டி, தந்தி டிவி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வீடியோவில் டாஸ்மாக் கடையை மூடுவது பற்றி மட்டுமே, ராஜேந்திர பாலாஜி பேசுகிறார். நாம் ஆய்வு செய்யும் வீடியோவிலோ சுமார் 10 நிமிட காட்சிகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இதன்படி, மே 4ம் தேதி நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் முழு வீடியோ ஆதாரம் தேடினோம். தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ யூ டியூப் பக்கத்தில் அந்த வீடியோ கிடைத்தது.

மே 4ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ, மே11ம் தேதி அப்டேட் செய்து, வெளியிட்டுள்ளனர். இதில், நாம் ஆய்வு செய்யும் வீடியோ பதிவில் உள்ளதைப் போலவே, ராஜேந்திர பாலாஜி பேசும் காட்சிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான ஒன்றுதான் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவு உண்மையானதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் பேச்சு சுவாரசியமாக உள்ளதால், பலரும் அதனை வைரலாக ஷேர் செய்வதை உணர முடிகிறது.

Avatar

Title:தந்தி டிவி நிகழ்ச்சியில் திமுக, அமமுக கட்சிகளை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி!

Fact Check By: Parthiban S 

Result: True

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •