‘’அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது – எச்.ராஜா கருத்து,’’ என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

வாசகர் ஒருவர் இந்த ஸ்கிரின்ஷாட்டை அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதனை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் சிலர் உண்மையா பொய்யா என தெரியாமல் பகிர்வதைக் கண்டோம்.

Twitter Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இந்த தகவல் பற்றி ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி,’’ என்றனர்.

மேலும் இந்த ஸ்கிரின்ஷாட்டில், விகடனில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஒருவர் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒருவேளை அவர் இதனை வெளியிட்டிருப்பாரோ என தகவல் தேடியபோது, அவரது ட்விட்டர் பக்கத்தில் (@CforCibi) அவரே இது பற்றி விளக்கம் அளித்திருப்பதைக் கண்டோம்.

எனவே, ஜூனியர் விகடன் லோகோ பயன்படுத்தி, போலியான செய்தி தயாரித்து பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது என்று எச்.ராஜா கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False