அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு- நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் செய்தி உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு,’’ என்று பரவும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (9049044263) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். 

Facebook Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இதையொட்டி, குறிப்பிட்ட கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகி ஒருவரிடம் இருந்து ரூ.1 லட்சம் திருடப்பட்டதாக, செய்தி வெளியானது. 

ஆனால், ‘’திருடன்கிட்டேயே திருடிட்டானுங்க’’ என்ற தலைப்பில் பரவும் மேற்கண்ட செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை. இதுதொடர்பாக, அந்த ஊடகத்தின் டிஜிட்டல் ஹெட் நமக்கு விளக்கம் அளித்துள்ளார். 
எனவே, மேற்கண்ட செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.


முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு- நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் செய்தி உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False