
‘’தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற நினைத்தது காங்கிரஸ் – குலாம்நபி ஆசாத்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். எனவே, நாம் இதுபற்றி தகவல் தேட தொடங்கினோம்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற நினைத்தது காங்கிரஸ். ஆனால் அதை தடுத்தது பாஜகதான் – குலாம்நபி ஆசாத் காங்கிரஸ்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதன் மேலே, ‘’ காங்கிரஸ் கட்சி சரியாக தானே செய்தது தாஜ்மஹால் அக்பரின் அந்தப்புரம் தானே..? அந்த காலத்து சிவப்பு விளக்கு பகுதியை இந்த காலத்து விபச்சார விடுதியாக மாற்றினால் என்ன தவறு?,’’ என்றும் எழுதியுள்ளனர்.
அதனை மீண்டும் ஒருமுறை கீழே பகிர்கிறோம்.

எனவே, இது மிகவும் சர்ச்சையாக இருப்பதால், இப்படி எங்கேயும் குலாம்நபி ஆசாத் பேசினாரா என்று தகவல் தேடினோம். ஆனால், அப்படியான செய்தி எதுவும் காணக் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, புதிய தலைமுறை ஊடகத்தினரை தொடர்புகொண்டு விளக்கம் பெற தீர்மானித்தோம். இதன்பேரில், புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை விளக்கம் கேட்டோம். தகவலை பார்வையிட்ட அவர், ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு. இப்படி நாங்கள் எதுவும் செய்தி வெளியிடவில்லை,’’ என்றார்.
எனவே, இது போலியான நியூஸ் கார்டு என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற காங்கிரஸ் முயற்சியா?- குலாம் நபி ஆசாத் பெயரில் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
