‘’ ராகுல் காந்தி மனைவி மற்றும் குழந்தைகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ This scoop from my ViChithrakoot family wh'app news:

தனக்கு இன்னும் திருமணம் ஆகலையென உலகை நம்பவைத்த.

இந்தியாவின் எதிர்கட்சி தலைவர்.

பிரிட்டிஷ் மற்றும் இத்தாலியின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்.

மனைவி மற்றும் குழந்தைகளுடன்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Archived Link l Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த 2022ம் ஆண்டு முதல் Bharat Jodo Yatra என்ற பெயரில் ராகுல் காந்தி அவ்வப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இதனை ஒட்டி, காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பல தரப்பட்ட பொதுமக்களுடன் ராகுல் காந்தி பேசுவது, உண்பது, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதும் வழக்கம்.

அந்த வரிசையில் கடந்த 2022 டிசம்பரில் மகிளா காங்கிரஸ் நிர்வாகி Priyanka Nandwana-ன் குழந்தைகள் மற்றும் மாணவிகள் சிலருக்கு, தன்னுடன் ஹெகாப்டரில் பறக்கும் வாய்ப்பை ராகுல் காந்தி வழங்கினார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில் உள்ள படமும்.

இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ளது.

Rajasthan Tak l Kanak News l Etv Bharat

இந்த உண்மை தெரியாமல் வேண்டுமென்றே ‘ராகுல் காந்தியின் மனைவி மற்றும் குழந்தைகள்’ என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.

Fact Crescendo Malayalam Link

எனவே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:FactCheck: ராகுல் காந்தி மனைவி மற்றும் குழந்தைகள் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை!

Fact Check By: Fact Crescendo Team

Result: False