‘‘தி கேரளா ஸ்டோரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Tweet Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரும் சர்ச்சைக்கு இடையே தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.

இந்நிலையில்தான், மேற்கண்ட வகையில் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மோடி என்று கூறி சிலர் தகவல் பரப்புகின்றனர். இதனைக் காரணமாக வைத்து, திமுக கூட்டணியை விட்டு முஸ்லீம் கட்சிகள் அனைத்தும் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

எனவே, இந்த செய்தி உண்மையா என்று நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் விளக்கம் கேட்டோம். அவர், ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி,’’ என்று தெரிவித்தார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:தி கேரளா ஸ்டோரி விவகாரம்: மு.க.ஸ்டாலினை பாராட்டினாரா மோடி?

Fact Check By: Fact Crescendo Team

Result: False