‘’மோடியை குருட்டு கபோதி என்று விமர்சித்த பாஜக எம்பி மேனகா குமாரி,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Tweet Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த வீடியோ பற்றி நாம் ஆய்வு மேற்கொண்ட போது, இவ்வாறு பாஜக எம்பி யாரும் பேசியதாக எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. அடுத்தப்படியாக, மேனகா குமாரி என்று இவர்கள் மேனகா காந்தியை கூறுகிறார்களோ என்றே முதலில் நினைத்தோம். ஆனால், மேனகா காந்தியின் தோற்றம் வேறொன்றாகும். இந்த வீடியோவில் பேசும் பெண் மேனகா காந்தி போல இல்லை.

எனவே, தொடர்ந்து இவர் பற்றி தகவல் தேடியபோது, இவரது பெயர் Dolly Sharma என்றும், இவர் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காசியாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்றும் தெரியவந்தது.

மோடி பற்றிய இந்த வீடியோவை இவர் 2021ம் ஆண்டு வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நமது இந்தி பிரிவினர் ஏற்கனவே விரிவான ஃபேக்ட்செக் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த லிங்க் கீழே தரப்பட்டுளளது.

Fact Crescendo Hindi Link

எனவே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் கோவிட் 19 பாதிப்பை மோடி அரசு சரிவர கையாளவில்லை என்று விமர்சித்து வீடியோ வெளியிட்டதை எடுத்து, பாஜக எம்பி மேனகா குமாரி மோடியை விமர்சித்துள்ளதாகக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title: மோடியை குருட்டு கபோதி என்று பாஜக எம்பி மேனகா குமாரி விமர்சித்தாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING