‘’ மாணவி நந்தினிக்கு பொருளாதாரம் டியூசன் நடத்தினேன்’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Facebook Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட செய்தி பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், இதனையும் சிலர் உண்மை என நம்பி மற்றவர்களுக்கு பகிர்கின்றனர். சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு படித்த நந்தினி என்ற திண்டுக்கல் மாணவி 600க்கு 600 மதிப்பெண் வாங்கி சாதனை படைத்தார்.

dailythanthi link l hindutamil link

இவர் பற்றி ஏற்கனவே சில வதந்திகளும் பரவி வருகின்றன. நாம் கூட ஃபேக்ட்செக் ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.

Fact Crescendo Tamil link

இந்த சூழலில்தான், நந்தினிக்கு, பொருளாதாரம் பாடம் நடத்தியதே நான்தான் என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் சிலர் மேற்கண்ட வகையில் தகவல் பரப்புகின்றனர். ஆனால், இது உண்மயல்ல. நாம் தமிழர் கட்சி தரப்பில் பேசி இதனை உறுதி செய்துள்ளோம்.

எனவே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மாணவி நந்தினிக்கு பொருளாதாரம் டியூசன் நடத்தினேன் என்று சீமான் கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False