‘’கொங்கு நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை – நியூஸ் 7 தமிழ் செய்தி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவலை, நியூஸ்7 தமிழ் டிவியின் ஆசிரியர் குழுவினர் நமக்கு அனுப்பி, ‘’நாங்கள் வெளியிட்ட செய்தியை சிலர் தவறாக புரிந்துகொண்டு, இது நாங்களே உருவாக்கிய டெம்ப்ளேட் போன்று குறிப்பிட்டு, தவறான தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி ஆய்வு செய்யுங்கள்,’’ என்று கேட்டுக் கொண்டனர். இதன்பேரிலேயே நாம் ஆய்வு மேற்கொண்டோம்.

இதன்படி, தமிழ்நாட்டில் மேற்கு மண்டலத்தை பிரித்து கொங்கு நாடு உருவாக்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளர்கள் சமீப நாட்களாக பேச தொடங்கியுள்ளனர். இதனால், கொங்கு நாடு விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் விசயமாக மாறியுள்ளது.

இந்த சூழலில், தமிழ்நாடு பாஜக.,வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலையை வரவேற்று, நாமக்கல்லில் வைக்கப்பட்ட பேனர் ஒன்றில், அவரை ‘கொங்கு நாட்டின் வருங்கால முதல்வரே’ என்று வர்ணித்துள்ளனர். இது சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளதென்று குறிப்பிட்டு நியூஸ்7 தமிழ் செய்தி ஒன்றை வெளியிட்டது.

ஆனால், இந்த வீடியோ செய்தியின் ஒரு ஃபிரேமை மட்டும் ஸ்கிரின்ஷாட் எடுத்து, நியூஸ்7 தமிழ் டிவியே இந்த டெம்ப்ளேட்டை தயாரித்தது போன்று சிலர் தகவல் பகிர தொடங்கியுள்ளனர்.

பாஜக.,வினர் வைத்த பேனரை குறிப்பிட்டே நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், அதனை எதோ நியூஸ்7 தமிழ் வெளியிட்ட டெம்ப்ளேட் என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தகவல் பகிர்வதால், குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, நியூஸ் 7 தமிழ் தரப்பில் மீண்டும் ஒருமுறை விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Archived Link

எனவே, குறிப்பிட்ட டெம்ப்ளேட்டை நியூஸ்7 தமிழ் தன்னிச்சையாக தயாரித்து வெளியிடவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:கொங்கு நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை?- நியூஸ்7 தமிழ் செய்தியை தவறாக புரிந்துகொண்டதால் குழப்பம்!

Fact Check By: Pankaj Iyer

Result: Missing Context