ரஃபேல் வாட்ச் ரசீது இல்லை என்று அண்ணாமலை கூறினாரா?
‘’ரஃபேல் வாட்ச் மட்டும்தான் என்னிடம் உள்ளது, பில் இல்லை,’’ என்று அண்ணாமலை கூறியதாகக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர் ஒருவர் நமக்கு +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண் வழியே அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் இந்த நியூஸ் கார்டு பகிரப்படுவதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, கையில் அணிந்திருக்கும் ரஃபேல் வாட்ச் ஒன்றின் விலை பற்றியும், அதற்கான ரசீது பற்றியும் திமுக தரப்பில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபற்றி சமூக வலைதளங்களிலும் பலர் காரசாரமாக விமர்சித்து பதிவிடுவதையும் காண முடிகிறது.
India Today Link I Financial Express Link
இந்த சூழலில், ‘’நான் ரஃபேல் வாட்சை அன்பளிப்பாக மட்டுமே பெற்றேன். அதற்கான பில் என்னிடம் இல்லை. அன்பளிப்பாக வாங்கிய பொருளுக்கு ரசீது காட்ட சொல்வது அபத்தமான செயல்,’’ என்று அண்ணாமலை பேசியதாகக் குறிப்பிட்டு மேற்கண்ட வகையில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில், இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் ஊடகம் வெளியிடவில்லை. அவர்களது பெயரில் சிலர் வேண்டுமென்றே இதனை தயாரித்து பரப்பி வருகின்றனர். அதேபோல, அவர் வேறு எங்கேயும் இவ்வாறு பேசியுள்ளாரா என்ற சந்தேகத்தில், பாஜக ஐ.டி.பிரிவு தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:ரஃபேல் வாட்ச் ரசீது இல்லை என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False