‘’ராமநாதபுரத்தில் பிஸ்கட் திருடியதால் தலித் சிறுவர்களை கட்டிப் போட்டு மொட்டையடித்து சித்ரவதை செய்த சாதி வெறியர்கள்,’’ என்ற தலைப்பில் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

நமது வாசகர்கள் சிலர், மேற்கண்ட தகவலை வாட்ஸ்ஆப் வழியே, நம்மிடம் அனுப்பி சந்தேகம் கேட்டனர். இதனை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில், ராமநாதபுரத்தில் நிகழ்ந்த சாதிக் கொடுமை எனக் கூறி பலரும் ஷேர் செய்வதாகவும், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படியும் கேட்டுக் கொண்டனர்.

குறிப்பிட்ட புகைப்படத்தில், 2 சிறுவர்களை மரத்தில் கட்டிப் போட்டு, அவர்களின் தலைமுடியை மழித்துச் சித்ரவதை செய்வது போன்ற புகைப்படம் ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’ராமநாதபுரத்தில் தம்பியின் பசிக்காக பிஸ்கட் திருடியதால், 2 தலித் சிறுவர்களை கட்டிப் போட்டு மொட்டையடித்து, கழுதையில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற ஆதிக்க சாதியினர்,’’ என எழுதியுள்ளனர்.

அதனை பெரிதுபடுத்தி மீண்டும் கீழே இணைத்துள்ளோம்.

இந்த தகவலை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடியபோது, இது கடந்த 2016ம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வருவதாக, தெரியவந்தது. தற்போதும் அதே தகவலை சற்று விரிவுபடுத்தி பகிர்கின்றனர் என்றும் புரிகிறது.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் பல ஆண்டுகளாகவே, இணையதளத்தில் பல்வேறு வதந்திகளுடன் பகிரப்பட்டு வரும் ஒன்றாகும். இதுபற்றி நாமும் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் உண்மை கண்டறியும் சோதனை ஒன்றை நடத்தியிருக்கிறோம்.

இவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, இந்த புகைப்படம் பற்றி ஏற்கனவே ஒடிசாவைச் சேர்ந்த இணையதளம் ஒன்று உண்மை கண்டறியும் சோதனை நிகழ்த்தி ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறது.

இது மட்டுமின்றி, இந்த சிறுவர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர்கள், மியான்மரைச் சேர்ந்தவர்கள், குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் வித விதமான வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதுபற்றி விரிவாக நாம் முன்பே வெளியிட்டிருந்த ஃபேக்ட்செக் கட்டுரை லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Tamil Story Link

இந்த வரிசையில் ஒன்றாகத்தான், கடந்த 2016ம் ஆண்டு முதலே, தமிழ்நாட்டிலும் இந்த சிறுவர்களை, ராமநாதபுரத்தில் பிஸ்கட் திருடியதற்காக சித்ரவதை செய்த ஆதிக்க சாதியினர் என்று கூறி வதந்தி பகிர்ந்து வந்துள்ளனர். அந்த தகவல் மீண்டும் வாட்ஸ்ஆப்பில் தற்போது வைரலாக பகிரப்படுகிறது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ராமநாதபுரத்தில் தலித் சிறுவர்கள் சித்ரவதையா?- பழைய புகைப்படம்!

Fact Check By: Pankaj Iyer

Result: False