அதிமுக பொதுச் செயலாளருக்கு மேல்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் இருக்க வேண்டும் என்று பகிரப்படும் வதந்தி…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’அதிமுக பொதுச் செயலாளருக்கு முன்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் குறையாமல் இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழுவில், புதிய தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரது எதிர் கோஷ்டியான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News 18 Tamil Article Link

மறுபுறம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓபிஎஸ் தரப்பினர், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி போன்றோரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

இந்த பரபரப்பு சூழலில், அதிமுக பொதுக்குழுவில், பொதுச் செயலாளருக்கு முன் வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் இருக்க வேண்டும் எனக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டு, சிலர் சமூக வலைதளங்களில் மேற்கண்ட வகையில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இப்படி எந்த தீர்மானமும் அதிமுக பொதுக் குழுவில் வெளியிடப்படவில்லை. இந்த நியூஸ் கார்டை பாலிமர் டிவியும் வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகி நமக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

பாலிமர் நியூஸ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பாலிமர் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து, மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:அதிமுக பொதுச் செயலாளருக்கு மேல்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் இருக்க வேண்டும் என்று பகிரப்படும் வதந்தி…

Fact Check By: Fact Crescendo Team 

Result: Altered