FactCheck: அதிகம் கேலி செய்யப்பட்ட நபர் என்று மோடி பெயரில் பகிரப்படும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம்

‘’சமூக வலைதளங்களில் அதிகம் கேலி செய்யப்பட்ட நபர் மோடி,’’ என்ற பெயரில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதனை உண்மையில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதா, என ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

புதிய தலைமுறை லோகோ வைத்து பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’சமூக வலைதளங்களில் அதிகம் கேலி செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டில் பகிரப்பட்டுள்ளதைப் போல, சமீபத்தில் ஆய்வு எதுவும் நடந்துள்ளதா, என்று தகவல் தேடினோம். எங்கேயும் கிடைக்கவில்லை. எனவே, இவர்களாக வேண்டுமென்றே இப்படி ஒரு செய்தி தயாரித்து பகிர்ந்திருக்கலாம் என்று தெளிவாகிறது.

அடுத்தக்கட்டமாக, புதிய தலைமுறை டிஜிட்டல் ஹெட் மனோஜை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்வையிட்ட அவர், இது போலியான செய்தி எனக் கூறினார்.

எனவே, மோடியை கிண்டல் செய்யும் விதமாக தயாரித்து பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அதிகம் கேலி செய்யப்பட்ட நபர் என்று மோடி பெயரில் பகிரப்படும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •