
‘’நுபுர் சர்மா கைது செய்யப்பட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
பாஜக.,வைச் சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் சமீபத்தில் நபிகள் நாயகம் பற்றி தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை சர்வதேச அளவில் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும என்று முஸ்லீம் அமைப்புகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில், மேற்கண்ட வீடியோவை சிலர் நுபுர் சர்மா கைது செய்யப்பட்டார் என்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில், இந்த வீடியோவில் இருப்பவர் நுபுர் சர்மா கிடையாது. இந்த வீடியோ, ராஜஸ்தான் மாநிலம், சூரு மாவட்டத்தில் கடந்த ஜூன் 16ம் தேதியன்று விவசாயிகள் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகும்.
இதுதொடர்பான வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதில்தான், குறிப்பிட்ட காட்சி மற்றொரு கோணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டதைக் காண முடிகிறது.

மேலும், Patrika ஊடகம் இதுபற்றி வெளியிட்ட செய்தியையும் கீழே இணைத்துள்ளோம்.
இதுதவிர, அன்றைய தேதியில் இந்த போராட்டம் பற்றி வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம்.
இந்த வீடியோ காட்சியை எடுத்தே, மேற்கண்ட வகையில் நுபுர் சர்மா கைது என்று வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. உண்மையில், நுபுர் சர்மா கைது செய்யப்பட்டதாக, இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:விவசாயிகள் போராட்ட வீடியோவை எடுத்து நுபுர் சர்மா கைது என்று பரப்பும் நெட்டிசன்கள்!
Fact Check By: Fact Crescendo TeamResult: False
