FACT CHECK: நடிகர் விவேக் என்னை தலைவர் என்று அழைப்பார் என சீமான் பேட்டி அளித்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மறைந்த நடிகர் விவேக் தன்னை தலைவர் என்றே அழைப்பார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தொலைக்காட்சிகளுக்கு சீமான் அளித்த பேட்டியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. சன் நியூஸ் லோகோ உள்ளது. அதில், “நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பார் – சீமான்” என்று இருந்தது. 

இந்த பதிவை மீயாவ் 3.0 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஏப்ரல் 20 அன்று பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் விவேக் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை புகழ்ந்து விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பார் என்று கூறினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்கிரீன்ஷாட்டில் சன் நியூஸ் லோகோ உள்ளது. எனவே, சன் நியூஸில் வெளியான சீமானின் பேட்டியைத் தேடி எடுத்தோம். யூடியூபில் சீமான், விவேக், இறுதி அஞ்சலி என கீ வார்த்தைகள் அடிப்படையில் தேடினோம். அப்போது சன் நியூஸில் வெளியான பேட்டி வீடியோ கிடைத்தது.

அந்த பேட்டியை பார்த்தோம். எந்த இடத்திலும் விவேக் தன்னை தலைவர் என்றுதான் கூப்பிடுவார் என்று சீமான் கூறவில்லை. மேலும், சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான செய்தியிலும் “நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பார் – சீமான்” என்று குறிப்பிடவில்லை. “நடிகர் விவேக்கின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி” என்றே இருந்தது. இதன் மூலம் சீமான் தொடர்பாக விஷமத்தனமாக ஸ்கிரீன்ஷாட்டை எடிட் செய்து பகிர்ந்திருப்பது உறுதியானது.

ஒருவேளை வேறு எங்காவது பேட்டி, அறிக்கையில் அப்படி கூறியிருக்கிறாரா என்று பார்த்தோம். விவேக் மறைவு தொடர்பாக சீமான் வெளியிட்ட இரங்கல் அறிக்கையை நாம் தமிழர் கட்சியின் இணையதளத்தில் இருந்து எடுத்தோம். அதிலும் அப்படி ஒரு வார்த்தையும் இல்லை.

அசல் பதிவைக் காண: naamtamilar.org  I Archive

நம்முடைய ஆய்வில். சன் நியூஸில் வெளியான சீமான் பேட்டி நமக்கு கிடைத்துள்ளது. அந்த பேட்டியை பார்த்த போது, நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பார் என்று சீமான் கூறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சன் நியூஸ் ஸ்க்ரோலிங்கில் நடிகர் விவேக்கின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி என்று மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், “நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பார்” என சீமான் கூறியதாக சன் நியூசில் செய்தி வெளியானதாக பரவும் ஸ்கிரீன்ஷாட் எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே கூப்பிடுவார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:நடிகர் விவேக் என்னை தலைவர் என்று அழைப்பார் என சீமான் பேட்டி அளித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 thought on “FACT CHECK: நடிகர் விவேக் என்னை தலைவர் என்று அழைப்பார் என சீமான் பேட்டி அளித்தாரா?

Leave a Reply