‘’மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை மீது கால் வைத்தபடி அமர்ந்துள்ளார். அதற்கு கீழே மோடியின் உருவப்படமும் இருப்பதால், அவர் வேண்டுமென்றே இப்படி அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இது இந்திய ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன்காரணமாக, சமூக வலைதளங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களை காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி புகைப்படம் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியாகி, அவர் உலகக் கோப்பையை அவமதித்து விட்டதாக, விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

Timesofindia Link l Hindustan Times Link l Tamil News18 Link

இதனை குறிப்பிட்டு, சன் நியூஸ் ஊடகமும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதனை கீழே இணைத்துள்ளோம்.

ஆனால், சன் நியூஸ் வெளியிட்ட டெம்ப்ளேட்டை எடிட் செய்து, சிலர் மேற்கண்ட வகையில் மோடியின் படத்தை இணைத்து, தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.

உண்மையான டெம்ப்ளேட் உடன் எடிட் செய்யப்பட்ட டெம்ப்ளேட்டை ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ‘மோடி படம் கொண்ட டெம்ப்ளேட்டை’ சன் நியூஸ் வெளியிடவில்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’ என்று பகிரப்படும் தகவல் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: ALTERED