பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆமா இந்த போஸ்ட் சுத்திட்டு இருக்கே அது யாரு உங்களுக்கு தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்க #திமுகவின்_சமூகநீதி_வேடம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link      பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

டெல்லியில் வடை சாப்பிட்டு கூத்தடிக்கும் தமிழ்நாடு பெண் எம்.பி.,கள் என்ற புகைப்படம் உண்மையா?

‘’ டெல்லியில் வடை சாப்பிட்டு கூத்தடிக்கும் தமிழ்நாடு பெண் எம்.பி.,கள்’’ என்று விகடன் கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விஷச்சாராய சாவுகளால் தமிழக பெண்களின்  தாலி அறுபடுவதை, அலட்சியம் செய்துவிட்டு  தில்லியில் கூத்தடிக்கும் விடியல் போராளிகள்..!’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை […]

Continue Reading

கனிமொழி விரட்டியடிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

தூத்துக்குடியில் கனிமொழியை விரட்டியடித்த மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக வேட்பாளர் கனிமொழிக்கு “அக்கா நீங்க பேசினா மட்டும் போதும்” என்று மக்கள் அளித்த ஆதரவு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிப்பு பொய் சொல்லி சொல்லி எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்ற […]

Continue Reading

‘எதுக்குப் புரியாம பேசுற’, என்று மோடியிடம் கேட்டாரா கனிமொழி?

“நீங்கள் என்ன பேசினாலும் புரியாது… எதுக்கு புரியாம பேசுற” என்று பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்த கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive நாடாளுமன்றத்தில் கனிமொழி மற்றும் மோடி பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்தியில் பேச, நீங்கள் என்ன பேசினாலும் புரியாது. எதுக்கு புரியாம பேசுற?” என்று நரேந்திர மோடியைப் பார்த்து கனிமொழி பேசுவது போலவும் வீடியோவில் உள்ளது. […]

Continue Reading

ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிஷன் வாங்கிய தி.மு.க என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

ஸ்டெர்லைட் முதலாளிகளிடமிருந்து ரூ.100 கோடியை தி.மு.க கமிஷனாக பெற்றுள்ளதாகவும் விரைவில் அந்த ஆலையை கனிமொழி வாங்க உள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் சன் நியூஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை நமக்கு அனுப்பியிருந்தார். அதில், “ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிசன். அருணா ஜெகதீசன் ஆணய பரிந்துரையை (குற்றவியல் […]

Continue Reading

FactCheck: கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரா?

‘‘கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இதுபற்றி நாம் நேரடியாகக் கனிமொழியின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் […]

Continue Reading

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தாரா கனிமொழி?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive “மதுக்கடையை மூடுறேன், 10 மணிக்கு மேல் மது விற்பனை இல்லை என்று சொல்றாங்க, ஆனாலும் அதற்கு அப்புறம் 11, 12 மணிக்கு கூட விற்கப்படுகிறது என்பதை தெளிவாக அவங்களே எடுத்து போட்டிருக்காங்க. இதில் இருந்தே இந்த ஆட்சி மதுவிலக்கு கொள்கையில் எவ்வளவு உறுதியாக […]

Continue Reading

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் என கனிமொழி கூறினாரா?

ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட ட்வீட், யூடியூப் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும்-கனிமொழி, எம்.பி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  நிலைத் […]

Continue Reading

தி.மு.க-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

திமுக-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனிமொழி திமுகவில் இருந்து விலகல்? திமுகவில் அதிகரித்து வரும் பாலியல் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக கட்சியில் இருந்து […]

Continue Reading

தி.மு.க மகளிரணி செயல்படுவதே இல்லை என்று உதயநிதி கூறினாரா?

தி.மு.க மகளிரணி செயல்படுவதே இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை. இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை. மகளிர் அணி செய்ய தவறியதை தான் […]

Continue Reading

FACT CHECK: அரசு பள்ளிக்கூட புத்தகப்பையில் ஸ்டிக்கர் ஒட்டியதா தி.மு.க?

அரசு வழங்கிய பள்ளிக்கூட பேகில் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி வழங்கியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive EPS போட்டோவே இருக்கட்டும்.. பெருந்தன்மை காட்டிய முதல்வர்… என சில மாதங்களுக்கு முன்பு வெளியான நியூஸ்கார்டை பயன்படுத்தி பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அதில், புளுகுமூட்டை திமுக என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு கீழ் தி.மு.க ஸ்டிக்கர் […]

Continue Reading

FactCheck: தூத்துக்குடியில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் கனிமொழி பேருந்து நிழற்குடை திறந்து வைத்தாரா?

தூத்துக்குடியில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை ஒன்றை கனிமொழி திறந்துவைத்துள்ளார், என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ தூத்துகுடி மக்களுக்கு கிடைத்த ஜேக்பாட். உலகிலேயே மிக விலை உயர்ந்த நிழற்குடை. வெறும் 154 லட்சம் மட்டுமே. அதாகப்பட்டது 1கோடியே 54 லட்சம். விடியல் அரசின் உலகசோதனை,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் […]

Continue Reading

FACT CHECK: திமுக ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக பரவும் வதந்தி!

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க மகளிரணியுடன் சபரிமலைக்கு செல்வேன் என்று கனிமொழி எம்.பி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கனிமொழி புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக ஆட்சிக்கு வந்த உடன் திமுக மகளிரணியுடன் சபரிமலைக்கு செல்வேன் – கனிமொழி எம்.பி பேச்சு” என்று இருந்தது. […]

Continue Reading

FactCheck: அடிக்கல் நாட்டியதும் கம்பி நீட்டினாரா கனிமொழி?- முழு உண்மை இதோ!

‘’காயல்பட்டணம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டிய கனிமொழி பிறகு கம்பி நீட்டிவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இதர சமூக […]

Continue Reading

FactCheck: கோத்தபய ராஜபக்சே அளித்த சர்ச்சை பேட்டி; முழு விவரம் என்ன?

‘’கனிமொழி, திருமாவளவனுக்கு பரிசு கொடுத்தோம்- கோத்தபய ராஜபக்சே வாக்குமூலம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770), வாசகர்கள் சிலர் அனுப்பி நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலரும் ஷேர் செய்வதை கண்டோம். Facebook Claim Link  Archived Link  உண்மை அறிவோம்:இதன்படி, ‘’விடுதலைப் புலிகள் […]

Continue Reading

FactCheck: திருப்பதி வெங்கடாஜலபதி ஒரு கருங்கல் பொம்மை என்று கனிமொழி கூறினாரா?

‘’திருப்பதி வெங்கடாஜலபதி ஒரு கருங்கல் பொம்மை என்று கனிமொழி விமர்சனம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த தகவலை வாசகர் ஒருவர், நமது வாட்ஸ்ஆப் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link 1 […]

Continue Reading

FactCheck: நாடார் சமுதாய வாக்குகள் தேவையில்லை என்று கனிமொழி கூறினாரா?

‘’நாடார் சமுதாய வாக்குகளை நம்பி நான் போட்டியிடவில்லை,’’ என்று கனிமொழி பேசியதாகக் கூறி நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link நியூஸ்18 தமிழ்நாடு லோகோவுடன் பகிரப்படும் இந்த நியூஸ் கார்டில், ‘’நாடார் சமுதாய வாக்குகளை நம்பி நான் தூத்துக்குடியில் போட்டியிடவில்லை. கனிமொழி ஆவேசம்,’’ என தலைப்பில் கூறப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் பகிரப்பட்டுள்ள இந்த […]

Continue Reading

திமுக தலைவராக வருவேன் என்று கனிமொழி சொன்னதாகப் பரவும் வதந்தி

‘’திமுக தலைவராக பொறுப்பேற்பேன்,’’ என்று கனிமொழி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், தந்தி டிவி பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’தலைவர் ஸ்டாலின் மறைவுக்குப் பின் நான்தான் திமுக தலைவராக பொறுப்பேற்பேன் – கனிமொழி,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

முதல்வர் ஆகும் தகுதி கனிமொழிக்கு உண்டு என்று வைகோ கூறவில்லை!

தி.மு.க முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி கனிமொழிக்கு உண்டு என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ட்விட்டரில் யாரோ வெளியிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டுடனான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். நியூஸ் கார்டில், “கனிமொழி பன்முக ஆற்றல் கொண்டவர். அவருக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உண்டு […]

Continue Reading

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததா?

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததாக ஒரு பதிவு வாட்ஸ்அப்-ல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும் அதை சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று நம்முடைய வாசகர் கேட்டதன் அடிப்படையில் ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 avatarnews.in Archived link 2 தி.மு.க எம்.பி கனிமொழி படத்துடன் செய்தி இணைப்பு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் லெட்டர் பேடு ஒன்றும் உள்ளது. பார்க்கும்போது தி.மு.க […]

Continue Reading

தமிழக கோவில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை அகற்ற வேண்டும் என்று கனிமொழி கூறினாரா?

தமிழக கோவில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கனிமொழி படம் மற்றும் நியூஸ்7 தமிழ் நியூஸ்கார்டை கொலாஜ் செய்து பதிவிட்டுள்ளனர். அந்த நியூஸ் கார்டில், “தமிழக கோயில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை தமிழக அரசு உடனடியாக இடிக்கவோ, அப்புறப்படுத்தவோ வேண்டும் […]

Continue Reading

மனைவியோடு சபரிமலைக்கு செல்வேன்: பியூஷ் மனுஷ் பெயரில் வதந்தி!

மகரஜோதிக்கு மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் என்று சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் படத்துடன் கூடிய நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பியூஸ் மனுஷ் அதிரடி. மகரஜோதிக்கு என் மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் – சமூக […]

Continue Reading

கனிமொழி வீடியோ வெளியானதா? ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்திய பதிவு!

“கனிமொழி வீடியோ வெளியானது. உச்சகட்ட அவமானத்தில் தி.மு.க. என்ன ஒரு அசிங்கம்” என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 தி.மு.க எம்.பி-க்கள் அ.ராசா, கனிமொழி புகைப்படத்தை சேர்த்து செய்தி பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “கனிமொழி வீடியோ வெளியானது. உச்சக்கட்ட அவமானத்தில் தி.மு.க. என்ன ஒரு அசிங்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

திமுக மகளிரணியுடன் மகரஜோதி அன்று சபரிமலை செல்வேன் – கனிமொழி பெயரில் வதந்தி!

தி.மு.க மகளிரணியினருடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தி.மு.க எம்.பி கனிமொழி புகைப்படத்துடன் கூடிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தி.மு.க மகளிரணியுடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் – கனிமொழி பேச்சு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. […]

Continue Reading

கர்நாடகத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடம்?

கர்நாடகாவில் வழங்கப்படும் இந்திய பாஸ்போர்ட்டில் கன்னடமும் உள்ளது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட் என்று இரண்டு படங்களை ஒன்று சேர்த்து ஒரே படமாக வெளியிட்டுள்ளனர். கர்நாடகாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடமும் உள்ளது போல படம் உள்ளது. இந்த பதிவை, ஷரீப் மன்பயீ காஞ்சிரங்குடி என்பவர் வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “என் தாய் மொழி […]

Continue Reading

அமித்ஷா காலில் விழுந்த கனிமொழி, மு.க.ஸ்டாலின்? – போலி புகைப்படத்தால் சர்ச்சை!

இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்ய மாட்டோம் என்று அமித்ஷா காலில் கனிமொழி, மு.க.ஸ்டாலின் விழுந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சோஃபாவில் அமர்ந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காலில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விழுவது போலவும் அவருக்கு அருகில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் விழ தயாரான நிலையில் இருப்பது போலவும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.  நிலைத் […]

Continue Reading

ராஜபக்சே மகன் திருமண விழாவில் கனிமொழி? – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே மகன் திருமண விழாவில் தி.மு.க முக்கிய தலைவர்களுள் ஒருவரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி பங்கேற்றதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே மகன் நமல் திருமண வரவேற்பு புகைப்படம் மற்றும் விருந்தில் அதிபர் ஶ்ரீசேனவுடன் கனிமொழி இருக்கும் புகைப்படம் இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலங்கை முன்னாள் […]

Continue Reading

லடாக் எம்.பி கேள்வியால் தலைகுனிந்த கனிமொழி – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

நாடாளுமன்றத்தில் பேசிய லடாக் பா.ஜ.க எம்.பி, லடாக் எங்கே இருக்கிறது என்று தெரியுமா என்று கனிமொழியிடம் கேட்டதாகவும், அதனால் தலைகுனிந்த கனிமொழி, தலையை நிமிர்த்தவே இல்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link லடாக் பா.ஜ.க எம்.பி ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால் படத்துடன் யாரோ வெளியிட்ட பதிவை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த […]

Continue Reading

“இந்துவாக மதம் மாறிய இயேசு” – கனிமொழி பேட்டி உண்மையா?

மிஷனரிகள் தொல்லை தாங்க முடியாமல் இயேசு இந்துவாக மதம் மாறினார் என்று கனிமொழி பேட்டி அளித்ததாக நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் தி.மு.க எம்.பி கனிமொழி பேட்டி என்று உள்ளது. அதன் கீழ், இந்து கோவிலில் இயேசு சிலை இருப்பது போன்ற […]

Continue Reading

தமிழக அரசு பேருந்துகளில் இந்தி எழுத்துகள்: உண்மை என்ன?

‘’தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை; இந்தியில் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன,’’ என குற்றம் சாட்டி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Admk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பேருந்து ஒன்றின் உள்ளே, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அந்த புகைப்படத்தின் மேலே, ‘’தமிழுக்கு இடமில்லை, தமிழக […]

Continue Reading

கனிமொழியின் உண்மையான தந்தை நடிகர் செந்தாமரை: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’நடிகர் செந்தாமரை கனிமொழியின் முதல் தந்தை,’’ எனக் கூறி ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link விளையாட்டு பையன் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது பார்க்கும்போதே மிகத் தவறான தகவல் என தெரிகிறது. இருந்தாலும், இதனை பலரும் உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கனிமொழியின் தந்தை திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி ஆவார். அவரது […]

Continue Reading

தேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா?

‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் முடிவுகள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Archived Link இதில், கனிமொழி சிறு வயதில் தனது தந்தை கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ முப்தாண்டுகளுக்கு முன்பு 1989ல் சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்ட தேசியமுன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் […]

Continue Reading

கனிமொழி சொந்தமாக சாராய ஆலை வைத்துள்ளார்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’தனது சொந்த சாராய ஆலையை கனிமொழி மூடுவாரா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link காலத்தின்குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த மே மாதம் 26ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, அதன் மேலே, ‘’60,575 வாக்குகள் பெற முடிந்த காளியம்மாவால் […]

Continue Reading

சிவப்பு சட்டை அணிந்து மேல்மருவத்தூர் சென்ற ஸ்டாலின்: இணைய தள செய்தி உண்மையா?

‘’சிவப்பு சட்டை அணிந்து மேல் மருவத்தூர் சென்றால் முதல்வர் பதவி கிடைக்கும் என்று மே தினத்தன்று தில்லாலங்கடி ஆடிய மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் ஒரு செய்தி இணையத்தில் பரவிவருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சிகப்பு சட்டை அணிந்து மேல்மருவத்தூர் சென்றால் முதல்வர் பதவி மே தினத்தில் தில்லாலங்கடி ஆடிய ஸ்டாலின் பரபர பின்னணி. Archived link 1 Archived line 2 மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் சிவப்பு நிற சட்டை அணிந்து ஊர்வலமாக […]

Continue Reading

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கனிமொழி?- வைரல் வீடியோ

‘’பணம் கொடுத்த கனிமொழி, தேர்தல் ஆணையம் பார்வையில் படும் வரை பகிருங்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது. ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பணம் வழங்குகிறார். எங்கே, எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை. இந்த […]

Continue Reading

சாமி சிலைக்கு மலர் தூவி வழிபட்டாரா மு.க.ஸ்டாலின்?– வைரல் புகைப்படம்

திராவிடம் மண்டியிட்டது என்ற தலைப்பில், சாமி சிலை ஒன்றுக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி வழிபடுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம் திராவிடம் மண்டியிட்டது ……. த்தா இனிமே எவனாது பெரியார் பொரியார்ன்னு வந்தா 10, செருப்படி விழும் சொல்லி வை Archived link இந்த புகைப்படத்தில் சாமி சிலை ஒன்றுக்கு சிவப்பு நிற ஆடை அணிந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் […]

Continue Reading