வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அப்பாவு வெளியேற்றம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அப்பாவு வெளியேற்றம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவுவை கதற கதற அடித்து  வேட்டியை கழட்டி வெளியேற்றிய CRPF வீரர்கள்..🔥🔥’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அப்பாவு வெளியேற்றப்படுவது போன்ற வீடியோ ஒன்றும், இணைக்கப்பட்டுள்ளது.  

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ, என்று தெரியவந்தது. 

இதன்படி, கடந்த 2016ம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட அப்பாவு, வாக்கு எண்ணுவதில், முறைகேடு நடப்பதாக, போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அவரை பாதுகாப்பு வீரர்கள், அங்கிருந்து, வெளியேற்றினர். இந்த வீடியோவை எடுத்து, புதியது போன்று தற்போது பரப்புகிறார்கள். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது, தற்போது அல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அப்பாவு வெளியேற்றம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply