தமிழக அரசு பேருந்துகளில் இந்தி எழுத்துகள்: உண்மை என்ன?

‘’தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை; இந்தியில் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன,’’ என குற்றம் சாட்டி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Admk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பேருந்து ஒன்றின் உள்ளே, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அந்த புகைப்படத்தின் மேலே, ‘’தமிழுக்கு இடமில்லை, தமிழக […]

Continue Reading

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை- மத்திய அரசு அதிரடி: ஃபேஸ்புக் செய்தியால் குழப்பம்

‘’சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை; மத்திய அரசு அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Balakrishnan Chellaiah என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், மாலை முரசு செய்தித்தாளை மேற்கோள் காட்டி, ‘’தமிழன் விழித்துக்கொள்ளும் நாள் எந்நாளோ? (தமிழன் என்ற பெயரில் ஒழிந்திருக்கும் அந்நியரே அதிகம்?) அதனால்தான் […]

Continue Reading

கருணாநிதி நினைவிடத்தைப் பராமரிக்கும் பொறுப்பு தங்க தமிழ்செல்வனுக்கு வழங்கப்பட்டதா? – விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்த தங்க தமிழ்செல்வனுக்கு கருணாநிதி நினைவிடத்தைப் பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிடும் நியூஸ்கார்டு போன்ற ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கருணாநிதி சமாதியை அலங்கரிக்கும் பொறுப்பை தங்க தமிழ்செல்வனுக்கு ஒதுக்கி தி.மு.க தலைமை முதல் அறிவிப்பு – தங்கதமிழுக்கு பதவி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

“பெண்ணின் மார்பகத்தில் முத்தமிட்ட போப் பிரான்சிஸ்!” – வைரல் போட்டோ உண்மையா?

பெண் ஒருவரின் மார்பின் மீது போப் பிரான்சிஸ் முத்தமிடுவது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெண் ஒருவரின் மார்பின் மீது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் முத்தமிடுவது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “போப்பாண்டவர் பாவமன்னிப்பு கொடுக்கும் போது கிளிக்கியது. பெரிய பாவமன்னிப்பா இருக்குமோ..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, 2019 ஜூன் […]

Continue Reading

வாட்ஸ்ஆப் முடக்கப்படும்- மோடி அரசின் புதிய அதிரடி: வதந்தியை நம்பாதீர்கள்!

‘’வாட்ஸ்ஆப் நள்ளிரவில் முடக்கப்படும், மோடி அரசின் புதிய அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்ஆப் வதந்தியை காண நேரிட்டது. இதனை பலரும் பகிர்ந்து வருவதால், இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி, இந்த வதந்தி வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. உண்மை அறிவோம்:கடந்த ஜூலை 3ம் தேதி முதலாக, இந்த வதந்தி பரவி வருகிறது. இதனை பலரும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்கள். […]

Continue Reading

படேல் சிலைக்கு பல கோடி ரூபாயில் ரெயின் கோட் அணிவிக்க மோடி அரசு திட்டமா?

‘’படேல் சிலைக்கு பல ஆயிரம் கோடி ரூபாயில் ரெயின் கோட் அணிவிக்க மோடி அரசு திட்டம்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Lakshmi Velpandi என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை, ஜூலை 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், சர்தார் படேல் சிலைக்கு ரெயின் கோட்டது போல ஒரு நியூஸ்பேப்பர் துண்டு காட்டப்பட்டுள்ளது. அதன் […]

Continue Reading

“மழை மேகத்தை உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்த நாசா” –ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

செயற்கையாக மழை பொழிவை ஏற்படுத்த மழை மேகத்தை உற்பத்தி செய்யும் கருவியை நாசா கண்டுபிடித்துள்ளதாக ஒரு வீடியோ, சமூக ஊடகங்களில் வைரல் ஆக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 59 விநாடிகள் ஓடும் பி.பி.சி வெளியிட்ட சிறிய வீடியோவை பதிவேற்றியுள்ளனர். வீடியோவின் தொடக்கத்தில் பெரிய பெரிய விண்வெளி ஆய்வுக் கூட கட்டிடத்தில் இருந்து வெண் புகை வருவதைக் […]

Continue Reading

நாகாலாந்துக்கு தனி கொடி மற்றும் பாஸ்போர்ட்? – பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

நாகாலாந்துக்கு தனி கொடி, பாஸ்போர்ட் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 “நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி… ஒப்புக் கொண்டது மத்திய அரசு?” என்று ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியாகி உள்ளது. இதை 2019 ஜூன் 30ம் தேதி […]

Continue Reading

மோடி ஆட்சியில் பாதியாகக் குறைந்த பருப்பு விலை: குழப்பம் தரும் செய்தி

‘’மோடி ஆட்சியில் பருப்பு விலை பாதியாகக் குறைந்துவிட்டது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நாச்சியார் தமிழச்சி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மார்ச் 21, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாஜக ஆட்சியில் விலைவாசி கூடிபோச்சுனு சொன்னவன்லாம் இதுக்குப் பதில் சொல்லு, என்று கூறி, ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், சேலம் […]

Continue Reading

“தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க சொன்ன மோடி!” –தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மையா?

“தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் நாட்டு நலனுக்காக நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொள்ளுதல் போன்ற சில தியாகங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்… தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 2019 ஜூலை 2ம் தேதியிட்ட தந்தி டிவி நியூஸ்கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் […]

Continue Reading

ரெய்டுக்கு பயந்து அண்ணா சமாதியில் தர்ம யுத்தம் நடத்திய எம்ஜிஆர்: ஃபேஸ்புக் வதந்தி

‘’ரெய்டுக்கு பயந்து அண்ணா சமாதியில் தர்ம யுத்தம் செய்த எம்ஜிஆர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Mathi Dmk  என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை 15, ஏப்ரல் 2018 அன்று வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் எம்ஜிஆர் சமாதி ஒன்றின் முன்பு அமைதியாக அமர்ந்திருக்க, அவருடன் அவரது மனைவி ஜானகி உள்ளிட்டோர் நிற்பதை காண […]

Continue Reading

சவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்து கோவில் – குழப்பும் ஃபேஸ்புக் பதிவு

சவுதி அரேபியாவில் சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், மண்ணில் புதையுண்ட விநாயகர் சிலை தெரிகிறது. மற்றொரு படத்தில் தொலைவில் மசூதி பேன்ற கட்டிடம் தெரிகிறது. அந்த படத்தின் மீது, “ திகைக்கவைத்த சவுதி அரேபியாவில் 3 ஆயிரம் ஆண்டுகள் […]

Continue Reading

முட்டை இடும் 14 வயது இந்தோனேசிய சிறுவன்: உண்மை என்ன?

‘’இந்தோனேசியாவில் 14 வயது சிறுவன் முட்டை போடுகிறான்,’’ என்ற தலைப்பில் ஏராளமான ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Marimuthu Yuvi எனும் ஃபேஸ்புக் ஐடி நபர் இதனை பகிர்ந்துள்ளார். இதேபோல பலரும் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையா என முதலில் ஃபேஸ்புக்கில் தேடிப் பார்த்தோம். அனைவருமே, இந்தோனேசியாவில் முட்டையிட்ட சிறுவன் என்றே தகவல் […]

Continue Reading

ஊக்கமருந்து குற்றச்சாட்டை தவறு என நிரூபித்த கோமதி மாரிமுத்து: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

‘’ஊக்கமருந்து குற்றச்சாட்டை தவறு என நிரூபித்தார் தங்க மங்கை கோமதி மாரிமுத்து,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Enigo Sudhakar என்பவர் கடந்த ஜூன் 22, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், கோமதி மாரிமுத்துவின் புகைப்படத்தை பகிர்ந்து அதன் மேலே, ‘’தங்க மகள் கோமதி அவர்கள் மேல் வைக்கப்பட்ட ஊக்க […]

Continue Reading

“எட்டு வழி சாலை திட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் ஆதரவாக வாதாடிய பி.வில்சன்!” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட பி.வில்சன் சென்னை – சேலம் எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Mr பழுவேட்டரையர் @mrpaluvets என்ற பெயரில் ட்விட்டரில் வெளியான பதிவின் படம் பகிரப்பட்டுள்ளது “8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கூடாது. செயல்படுத்த […]

Continue Reading

“மன்மோகன் சிங் வீடு தேடிச் சென்ற மோடி!” – சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரது வீட்டுக்குச் சென்று பிரதமர் மோடி சந்தித்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 “முன்னாள் பிரதமர் மன்மோகனை சந்திக்க வீடு தேடி வந்த பிரதமர் மோடி! எதற்குத் தெரியுமா?” என்று தலைப்பிட்டு patrikai.com என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நிதி […]

Continue Reading

மத்தியப் பிரதேசத்தில் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்! – துணிந்து பொய் சொல்லும் ஃபேஸ்புக் பதிவு!

மத்தியப் பிரதேசத்தில் பள்ளி வாசலில் நின்றுகொண்டிருந்த 7 வயது சிறுமியை இஸ்லாமியர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட, உயிருக்குப் போராடும் குழந்தை ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தின் மீது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வாயிலில் பொற்றோர் வருகைக்காக காத்திருந்த 7 வயது […]

Continue Reading

நாசா வியந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில்; ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை

‘’நாசா வியந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Leo Vimal ஜூன் 23,2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’சேட்டிலைட் மூலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வடிவம் வட்டமாக இருப்பதை பார்த்து ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி கெப்ளர் அதிர்ச்சி அடைந்தார். இதனை நேரில் வந்து […]

Continue Reading

அண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் உண்மையா?

அண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Samayam Tamil இந்த பதிவை கடந்த 28, ஜூன் 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், அவர்களின் இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றின் லிங்கையும் இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

“எல்லா நோய்க்கும் பதஞ்சலியில் தீர்வு என்று சொன்ன பாபா ராம்தேவ், மருத்துவமனைக்கு சென்றார்!” – ஃபேஸ்புக் போஸ்ட் உண்மையா?

தன்னுடைய பதஞ்சலி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தினால் எந்த நோயுமின்றி, ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறிய யோகா குரு பாபா ராம்தேவ், தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதாகக் கூறி, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link மருத்துவமனையில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. அதில், அவருக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டதற்கான […]

Continue Reading

“பாராசிட்டமால் மாத்திரையில் வைரஸ் கிருமி!” – பீதி கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு!

பாராசிட்டமால் மாத்திரையில் வைரஸ் கிருமித் தொற்று பாதிப்பு இருப்பதாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பாராசிட்டமால் மாத்திரை அட்டை படம், நோயாளி பெண் ஒருவர் படுத்திருக்கும் படம், முதுகெல்லாம் புள்ளி புள்ளியாக உள்ள ஆண் நோயாளி ஒருவர் படம் என பல படங்களை பகிர்ந்துள்ளனர். அதனுடன், “எச்சரிக்கை… எச்சரிக்கை! P/500 எழுதப்பட்ட பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளாமல் கவனமாக இருங்கள். இது […]

Continue Reading

வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் போராட்டம் வெடிக்கும்: துரைமுருகன் எச்சரிக்கை

‘’ வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் போராட்டம் வெடிக்கும்- துரைமுருகன் எச்சரிக்கை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sathiyam TV இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது. இதனுடன் அந்த தொலைக்காட்சியின் இணையதள செய்தி ஒன்றின் லிங்கும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இந்த செய்தியை வைரலாக பலரும் பகிர்ந்து […]

Continue Reading

மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

‘’தேவை எனில் மாறன் சகோதரர்களை சிறையிலடைத்து விசாரிக்கலாம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Kadal Bjp என்பவர் ஜூன் 18, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். டிவி.,களில் வரும் பிரேக்கிங் நியூஸ் போன்ற டெம்ப்ளேட் பயன்படுத்தி, ‘’சிறையிலடைக்க உத்தரவு – பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து கூட விசாரிக்கலாம்- […]

Continue Reading

பா.ஜ.க-வில் இணைந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, பா.ஜ.க-வில் இணைந்ததாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரதமர் மோடியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா பா.ஜ.க-வில் இணைந்தார் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பதிவை Bullet Pandi RD என்பவர் 2019 ஜூன் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை தற்போது பலரும் பகிர்ந்து […]

Continue Reading

டாக்டர் என்ற பெயரில் காம லீலை செய்த நபர்: வீடியோ உண்மையா?

‘’டாக்டர் என்ற பெயரில் காம லீலை செய்த நபரின் வீடியோ ஆதாரம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மஹ்மத் தாஜுதீன் என்பவர் கடந்த ஜூன் 24, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சிசிடிவி கேமிரா காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், டாக்டர் ஒருவர் சிகிச்சை தரும்போது திடீரென பெண் நோயாளி ஒருவர் […]

Continue Reading

“காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குவோரை சுட்டுத்தள்ள உத்தரவிட்ட அமித்ஷா?” – பகீர் ஃபேஸ்புக் பதிவு!

காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவோரை கண்டதும் சுட உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பதிவில், “காஷ்மீரில் பொது மக்கள் மீதும் இராணுவத்தினர் மீதும் கல்லெறியும் கயவர்களை யார் அனுமதியின்றியும் […]

Continue Reading