‘’கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவை சந்திக்க நேரம் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ நயன்தாராவைச் சந்திக்க நேரமிருக்கு , கருணாபுரம் போகத் தான் நேரமில்லை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்ற ஊரில் கள்ளச்சாராயம் குடித்ததால், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2

இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை அங்கே நேரில் செல்லவில்லை. அவருக்குப் பதிலாக, உதயநிதி ஸ்டாலின் மட்டுமே நேரில் சென்றிருந்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு இதுவரை நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை ஏன் பார்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது தொடர்கதையாக உள்ளது.

இத்தகைய சூழலில், ‘கள்ளக்குறிச்சி செல்ல நேரமில்லை, ஆனால், நயன்தாராவை சந்திக்க மட்டும் நேரம் உள்ளது,’ என்று குறிப்பிட்டு, மு.க.ஸ்டாலின் மற்றும் நயன்தாரா ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இது உண்மையா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். ஆம், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் நயன்தாரா மற்றும் விக்னஷ் சிவன் இருவரும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்களது திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது…

India Today Link l Hindustan Times Link l ABP Nadu Link

எனவே, சம்பந்தமில்லாத புகைப்படம் ஒன்றை எடுத்து, ‘கள்ளக்குறிச்சி செல்ல மு.க.ஸ்டாலினுக்கு நேரமில்லை, ஆனால், நயன்தாராவை சந்திக்க மட்டும் நேரம் உள்ளது,’ என்று குறிப்பிட்டு, வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவை சந்திக்க நேரம் ஒதுக்கினாரா மு.க.ஸ்டாலின்?

Written By: Fact Crescendo Team

Result: Misleading