FACT CHECK: ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கூறினாரா சூர்யா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என்று நடிகர் சூரியா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் சூர்யா புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் – நடிகர் சூர்யா” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Sheik Abdullah என்பவர் 2021 ஜூலை 3ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமூக ஊடகங்களில் பலரும் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்து வருகின்றனர். சிலர் சினிமா படம் ஒன்றில் கூன் விழுந்தது போன்று நடித்த புகைப்படத்துடன் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்து வருகின்றனர். கூர்ந்து பார்த்தால் “மத்திய அரசு ஒளிவரைவு” என்று எழுதப்பட்ட பகுதி மட்டும் தனியாக சேர்க்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. எனவே, இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என்பது தெளிவாகிறது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதை உறுதி செய்ய முதலில் தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டை தேடினோம். தினமலர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவுகளைப் பார்வையிட்டோம். அப்போது 2021 ஜூலை 2ம் தேதி தினமலர் வெளியிட்டிருந்த அசல் நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக… அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல… – நடிகர் சூர்யா” என்று இருந்தது. 

எதற்காக சூர்யா இப்படி கூறியிருக்கிறார் என்று தேடினோம். அப்போது ஒளிப்பதிவு திருத்த மசோதா தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டிருக்கும் செய்தி நமக்கு கிடைத்தது. அந்த அறிக்கை நடிகர் சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நமக்குக் கிடைத்தது. “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல. இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபனையைத் தெரிவியுங்கள்” என்று பதிவிட்டுப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: dailythanthi.com I Archive

நடிகர் சூர்யா நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக குறிப்பிட்ட ஒரு கட்சியினர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். சூர்யாவின் உயரம் உள்பட பல்வேறு விஷயங்களை வைத்து அவரை விமர்சித்து இன்பம் காண்கின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு தொடர்பாக சூர்யா வெளியிட்ட அறிக்கையை திருத்தி சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கூறியதாக தினமலர் நியூஸ் கார்டில் திருத்தம் செய்து பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எச் ராஜா நான்கு கோடி சம்பாதித்தார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் பசுமை விகடன் அட்டைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கூறினாரா சூர்யா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

1 thought on “FACT CHECK: ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கூறினாரா சூர்யா?

  1. The person comments related to the Government new law

    You accept the same

    But how defini this is fack😂😂😂😂😂😂

Comments are closed.