அம்மா உணவகத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய யோகி பாபு என்று பரவும் தகவல் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

திரைப்பட நடிகர் யோகி பாபு அம்மா உணவகத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive

தமிழக முதல்வர் விஜய்யிடம் அம்மா உணவகத்திற்காக ரூ.1 கோடியை நடிகர் யோகி பாபு அளிப்பது போன்று புகைப்படம் threads.com-ல் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஏழைகளின் பசியை போக்க CM விஜய் யிடம் 1கோடி ரூபாய் அம்மா உணவகத்திற்கு வழங்கினார் நடிகர் யோகி பாபு.#trendingreel #temple #politics #யோகிபாபு #அம்மா ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அம்மா உணவகம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. அம்மா உணவகத்திற்கு ரூ.1 கோடியை நடிகர் யோகி பாபு அளித்ததாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அப்படி நிதி உதவி செய்ததாக யோகி பாபு தரப்பிலிருந்தோ, தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.  எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இடம் பெற்ற காசோலையில் 2025ம் ஆண்டு என்று உள்ளது. தமிழ்நாடு அரசு சின்னத்தில் வாய்மையே வெல்லும் என்பது தவறாக உள்ளது. இவை எல்லாம் இந்த புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன. ஏஐ புகைப்படங்களை கண்டறிய உதவும் இணையதளத்திலும் இந்த புகைப்படத்தை பதிவேற்றித் தேடினோம். அவையும் இது ஏஐ புகைப்படம் என்று உறுதி செய்தன.

யோகி பாபு தமிழ்நாடு அரசிடம் அம்மா உணவகத்திற்காக பணம் கொடுத்ததாக எந்த செய்தியும் இல்லை. தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரத் துறை இணையதளம், சமூக ஊடக பக்கங்களிலும் அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.

இது தொடர்பாக யோகி பாபு தரப்பை தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

அம்மா உணவகத்திற்கு ரூ.1 கோடி நன்கொடையை முதல்வர் விஜய்யிடம் வழங்கினார் நடிகர் யோகி பாபு என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: அம்மா உணவகத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய யோகி பாபு என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply