திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் ராஜன் செல்லப்பா கூறினாரா?  

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும்,’’ என்று அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா வாக்குறுதி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும்- அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது போலியானது, என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக, Tamil Janam ஊடகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், ராஜன் செல்லப்பா தரப்பிலும் இதுபற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் ராஜன் செல்லப்பா கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply