FactCheck: தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்என் ரவி கைது?- முழு விவரம் இதோ!

அரசியல் இந்தியா தமிழ்நாடு

‘’தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்என் ரவி, அரசு பங்களாவை கைது செய்ய மறுத்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர் என் ரவி வட இந்தியாவில் முன்னர் பணிபுரிந்தபோது, அரசு இல்லத்தை காலி செய்ய மறுத்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்ட வீடியோ, என்று கூறி இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பெரும் பரபரப்புக்கு இடையே தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்என் ரவி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து ஆளுநராக பணிபுரிந்த அவர், தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதால் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்ற சந்தேகத்தில் பலரும் சமூக வலைதளங்களில் மாறி மாறி விவாதித்து வருகின்றனர்.

Vikatan Link I BBC Tamil Link I News18 Tamil Link

இந்த பின்னணியில்தான் நாம் ஆய்வு செய்யும் வீடியோ தகவலும் பகிரப்படுகிறது. ஆனால், அதில் கூறப்படுவதுபோல, கைது செய்யப்பட்ட நபர் ஆர் என் ரவி அல்ல. அவர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாகூர் ஆவார்.

பார்ப்பதற்கு, ஆர்என் ரவி போல சற்று தோற்றமளித்தாலும், அமிதாப் தாகூர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. அவர் சமீபத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரிதும் விவாதத்தை ஏற்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான வீடியோவை எடுத்து, ஆர்என் ரவி கைது செய்யப்பட்ட காட்சி எனக் கூறி சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.

மேலும், சில செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

TOI Link I Indian Express Link

ஆர்என் ரவி மற்றும் அமிதாப் தாகூர் இருவரையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் ஒரு ஒப்பீடு செய்து, அந்த புகைப்படத்தை கீழே இணைத்துள்ளோம்.

எனவே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாகூர் கைது செய்யப்பட்ட வீடியோவை எடுத்து, ஆர்என் ரவி கைது செய்யப்பட்ட காட்சி என கூறி வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்என் ரவி கைது?- முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: False