‘’ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படம்,’’ என்று கூறி பரவி வரும் ஒரு புகைப்படத்தை உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில், ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருக்க, எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அவரை வணங்குவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படத்தை உற்று கவனித்தால், ஓ.பன்னீர்செல்வமே சற்று பட்டும் படாமல்தான் அமர்ந்துள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. அதுவும் அவர் தன் அருகே நிற்கும் எடப்பாடி பழனிசாமி போன்றோரை கவனிக்காமல் வேறு எங்கோ பார்த்தபடி இருப்பதையும் காணலாம்.

எனவே, இதில் வேறு யாரேனும் ஓபிஎஸ் அருகில் அமர்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது கிடைத்த உண்மையான புகைப்படத்தில், ஓபிஎஸ் அருகில் ஜெயலலிதா அமர்ந்திருக்கிறார்; அவரைப் பார்த்தே எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றோர் வணங்குகிறார்கள் என்று தெரியவருகிறது.

இதன்படி, ஜெயலலிதா பற்றி Getty Images வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து, ஜெயலலிதா இருப்பதை மறைத்துவிட்டு, ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் மட்டும் இருப்பதைப் போல பெரிதாக்கி தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

BBC Tamil News Link

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் சில மாதங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். பிறகு, சசிகலாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பதவி விலகியதும், அவருக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்ததும் எல்லோரும் அறிந்த கதைதான். ஆனால், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் எடிட் செய்த புகைப்படத்தை பகிந்து, ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்!

Fact Check By: Pankaj Iyer

Result: False