FACT CHECK: இளம் வயதில் அன்னை தெரசா என்று பகிரப்படும் வியட்நாம் பெண்ணின் படம்!

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

அன்னை தெரசாவின் இளம் வயது புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

அன்னை தெரசா படத்துடன் இளம் வயது பெண்மணி ஒருவரின் புகைப்படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதில், “எங்கு தேடினாலும் கிடைக்காத அழகிய புகைப்படங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அன்னை தெரசா இளம் வயது படம் நண்பர்களே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை 2020 ஜூன் 7ம் தேதி பகிர்ந்துள்ளனர். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அன்னை தெரசாவின் இளம் வயது புகைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பார்க்க இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற தென் ஆசிய நாட்டவரைப் போல உள்ளது. எனவே, உண்மையில் இது அன்னை தெரசாவின் இளம் வயது புகைப்படம் தானா என்று ஆய்வு செய்தோம்.

gettyimages.inArchived Link

அன்னை தெரசாவின் இளம் வயது புகைப்படங்களை தேடியபோது, முற்றிலும் வேறுபட்ட படங்கள் நமக்கு கிடைத்தன. கெட்டி இமேஜ் என எதிலும் இந்த புகைப்படம் இல்லை. ஒரு இணைய தளத்தில் தெரசாவின் 18 வயதில் எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தனர். அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படத்தில் அது அவரது 18வது வயதில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த படம் தெரசாவின் படம் இல்லை என்பது உறுதியானது.

vintag.esArchived Link

இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். பலரும் இந்த புகைப்படத்தை தற்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை காண முடிந்தது. சமூக ஊடகங்களில் பகிர்வதை அடிப்படையாகக் கொண்டு சில இணைய ஊடகங்கள் கூட அன்னை தெரசாவின் இளம் வயது படம் என்று பகிர்ந்து வந்திருப்பதை காண முடிந்தது.

இவற்றுக்கு நடுவே childrenvietnam.org என்ற தளத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 

அதில், “கடவுள் உங்களுக்கு அளித்த பரிசு வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் மூலம் நீங்கள் செய்யும் காரியங்களே கடவுளுக்கு நீங்கள் வழங்கு பரிசு – அன்னை தெரசா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

childrenvietnam.orgArchived Link 1
bangaloremirror.indiatimes.comArchived Link 2

அதில், அந்த புகைப்படத்திலிருந்து அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் வசித்து வந்த வியாட்நாம் நாட்டைச் சேர்ந்த டிரான் அன் புவோங் (Tran Anh Phuong) என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், எங்களின் தாயார் டிரான் அன் புவோங் 2008ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார்.

அவர் குழந்தைகளுக்கு, தேவைப்படுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தவர். அவருடைய பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படுவதாகவும், அதற்கு நிதி உதவி செய்ய விரும்புகிறவர்கள் செய்யலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். 

Tran Anh Phuong என்ற கீ வார்த்தையை பயன்படுத்தி கூகுளில் தேடிய போது இது தொடர்பாக பல செய்திகள், உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பது தெரிந்தது. 

நம்முடைய ஆய்வில்,

அன்னை தெரசாவின் இளமைக் கால படங்களுடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படங்கள் ஒத்துப் போகவில்லை.

இந்த படத்தில் உள்ள பெண்மணி வியட்நாமைச் சேர்ந்தவர் என்று அவரது குடும்பத்தினர் வெளியிட்ட பதிவு கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படத்தில் இருக்கும் பெண்மணி இளமைக் கால அன்னை தெரசா இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அன்னை தெரசா என்று கூறி பகிரப்படும் வியட்நாம் பெண்ணின் படம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply