'’ ஜப்பானில் திரண்ட ஆயிரக்கணக்கான காகங்கள் – விசித்திர நிகழ்வு,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim Link l Archived Link

இதுபற்றி பாலிமர் நியூஸ் வெளியிட்ட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

Polimer News FB Link l Instagram Link

உண்மை அறிவோம்:

சமீபத்தில், துருக்கி, சிரியா நாடுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையொட்டி, சமூக வலைதளங்களில் பீதி ஏற்படுத்தும் நோக்கில் ஏராளமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன.

இந்த வரிசையில் பகிரப்படும் ஒரு வதந்திதான் மேற்கண்ட வீடியோ பதிவும்.

ஆம், ‘ஜப்பான் நாட்டில் திரண்ட காகங்கள், மிகப்பெரும் பிரளயம் நிகழப்போகிறது,’ என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை முன்னணி ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையில், இந்த வீடியோ மெக்சிகோ நாட்டில் எடுக்கப்பட்டதாகும். இதுபற்றி வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே இணைத்துள்ளோம்.


msn.com link l netnoticias.mx link

இதுதவிர, இந்த வீடியோ முதன்முதலாக, டிக்டொக் தளத்தில் பகிரப்பட்டதைக் கண்டோம். அந்த பதிவின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

tiktok post link

மேலும், வீடியோவில் வரும் கார் ஒன்றின் பதிவெண் தகட்டை பார்க்கும்போது, இது மெக்சிகோ நாட்டில் நிகழ்ந்ததுதான் என்று உறுதி செய்ய முடிகிறது.

Guanajuato என்று இதில் எழுதப்பட்டுள்ளது. இது, மெக்சிகோ நாட்டில் உள்ள இடம். எனவே, மெக்சிகோ நாட்டில் நடந்த சம்பவம் ஒன்றை எடுத்து, ஜப்பானுடன் இணைத்து வதந்தி பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

எனினும், காகங்கள் இப்படி ஒரே இடத்தில் திடீரென திரண்டதற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இதுபற்றி நமது இலங்கைப் பிரிவினர் நடத்திய ஃபேக்ட்செக் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Sri Lanka Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஜப்பானில் திரண்ட காகங்கள் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING