டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகமாக மாற்றப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகமாக மாற்றம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Tweet Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை திமுக அலுவலகம் என்று குறிப்பிட்டு தமிழ்நாடு அரசாங்கம் மாற்றியதாகக் கூறப்படுவது தவறான தகவல். இதுபற்றி நாம் அரசு தலைமைச் செயலகம் தரப்பில் விசாரித்தபோது, ‘’இது அரசின் தவறு அல்ல. கூகுள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தன்னிச்சை கோளாறு. இதற்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லை,’’ என்றனர்.

இதன்பேரில், TASMAC அதிகாரப்பூர்வ இணயதளம் சென்று நாமும் இப்படி மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது, இதேபோன்று, நமக்கும் DM Office என்பதை திமுக அலுவலகம் என்று கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு காட்டியது.   

தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. 

சந்தேகத்தை உறுதி செய்துகொள்ள மீண்டும் ஒருமுறை கூகுள் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்தோம். DM என்று கூகுளில் டைப் செய்து, மொழிபெயர்ப்பு செய்தால், அது திமுக என்றே காட்டுகிறது. 

இதேபோல, DM Office என்று டைப் செய்தால், அது திமுக அலுவலகம் என்றுதான் காட்டுகிறது. 

எனவே, ‘’இது கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்பட்டுள்ள பிழை, இதற்கும் தற்போதைய தமிழ்நாடு அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை,’’ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

https://api.whatsapp.com/send?phone=9049053770

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகமாக மாற்றப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Explainer