துபாயில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை தரப்பட்டதா?

அரசியல் உலகச் செய்திகள் சமூக ஊடகம்

துபாய் நாட்டில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு, அடுத்த 15 நிமிடத்தில் மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் தரப்பட்டது, என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770)  அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, இந்த வீடியோ செய்தி கடந்த 2018ம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வருவதைக் கண்டோம். 


Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் நாம் தகவல் தேடியபோது, இந்த வீடியோ கடந்த 2017ம் ஆண்டு ஏமன் நாட்டில் எடுக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது. 

The Sun Article Link

இதன்படி, ஏமன் நாட்டைச் சேர்ந்த Hussein Abdullah Al-Saket என்ற நபர் 2015ம் ஆண்டு 5 வயது சிறுமியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்து, கொன்ற பிறகு அந்த சடலத்தை தீ வைத்து எரித்துள்ளார். இதற்காக, அந்த நபரை கைது செய்து, விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்ட பின், ஏமன் அரசு பொதுமக்கள் முன்னிலையில் அவரை சுட்டுக் கொன்று, பிறகு சடலத்தை கிரேன் உதவியுடன் கட்டித் தொங்கவிட்டுள்ளது. 


NYPost Link I metro.co.uk link 

இதுதொடர்பான வீடியோவை எடுத்தே மேற்கண்ட வகையில், ‘’துபாயில் பாலியல் குற்றம் செய்த 15 நிமிடத்திலேயே மரண தண்டனை தரப்பட்டது, ‘’ எனக் குறிப்பிட்டு சிலர் தகவல் பரப்புகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகறது. எனவே, சம்பவம் உண்மைதான்; ஆனால், நடந்த இடம் துபாய் அல்ல, ஏமன் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை வாசகர்கள் உண்மை என்று நம்பி பகிர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம். 


முடிவு:உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:துபாயில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை தரப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISSING CONTEXT