ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு திமுக ஐடி விங் காரணம் என்று பரவும் நியூஸ்கார்டு உண்மையா?  

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு திமுக ஐடி விங் காரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ வெளியான ஜனநாயகன். அதிர்ச்சி தகவல். ஜனநாயகன் படம் நேற்று இரவு இணையத்தில் வெளியானதுக்கு பின்னால் திமுக ஐடி விங் சேர்ந்த நபர்கள்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ்கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டு, என்று தெரியவந்தது. 

இதன்படி, உண்மையான நியூஸ்கார்டில், ‘’வெளியான ஜனநாயகன். ‘ஜனநாயகன்’ முழு படமும் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி. படத்தின் 5 நிமிட காட்சிகள் நேற்று இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் பரபரப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

கூடுதல் ஆதாரத்திற்காக, News Tamil 24X7 ஊடகம் மறுப்பு வெளியிட்டுள்ளதைக் கண்டோம். அதனையும் இங்கே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ்கார்டு தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Result Stamp

Title: ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு திமுக ஐடி விங் காரணம் என்று பரவும் நியூஸ்கார்டு உண்மையா?  

Written By: Pankaj Iyer

Result: Altered

Leave a Reply