தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து கோயில்கள் மூடப்படும் என்று சேகர் பாபு கூறினாரா?  

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து கோயில்கள் மூடப்படும்,’’ என்று அமைச்சர் சேகர்பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ கோயில்கள் நடையடைப்பு. ஒன்றிய அரசு கொண்டுவரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிராக நாளை ஒருநாள் இந்து அறைநிலைதுறை கீழ் இயங்கும் கோயில்கள் நடை அடைக்கப்படும், மசோதாவை எதிர்க்கும் விதமாக நாளை அனைத்து கோயில்களிலும் கருப்பு கொடி கட்டப்படும்- அமைச்சர் சேகர் பாபு.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது புதிய தலைமுறை பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக, புதிய தலைமுறை ஆசிரியர் குழுவில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ்கார்டு தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Result Stamp

Title: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து கோயில்கள் மூடப்படும் என்று சேகர் பாபு கூறினாரா?  

Written By: Pankaj Iyer

Result: False

Leave a Reply