திமுக இருக்கும் வரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடமாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?  

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘திமுக இருக்கும் வரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடமாட்டோம்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இது பெரியார் மண். ‘திமுக இருக்கும் வரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடமாட்டோம்’ வேண்டும்மென்றால் தினமும் உங்கள் வீட்டு சமையல் அறையிலோ? பூஜை அறையிலோ தீபத்தை ஏற்றுங்கள் என தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆவேசத்துடன் பேசினார்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது. 

இதன்படி, உண்மையான நியூஸ் கார்டில், ‘’திமுகதான் OG ‘’மக்களுக்கான முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் OG. திமுக ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அது கண்டிப்பாக சாதனைத் திட்டமாகத்தான் இருக்கும். ஒன்றிய அரசே நமது திட்டங்களை காப்பி அடிக்குது”- திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..’’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. 

Sun News Tamil Link 1 l Link 2  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: திமுக இருக்கும் வரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடமாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: Altered

Leave a Reply