கோவை வடக்கில் வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார் என்று பரவும் கருத்துக்கணிப்பு உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிபெறுவார் என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “யாருக்கு வெற்றி? கோவை வடக்கு வானதி சீனிவாசன் 42.7 சதவிகிதம். கோவை வடக்கில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் அவர்களுக்கு 42.7% பேர் ஆதரவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிபெறுவார் என்று புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு வௌியிட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை புதிய தலைமுறை வெளியிட்டது போன்று தகவல் இல்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இது போலியானது என்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இதை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். மேலும், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு வாட்ஸ்அப் -ல் நமக்கு நியூஸ் கார்டை அனுப்பினார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றிபெறுவார் என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

FacebookI X PostI Google News ChannelI Instagram

Result Stamp

Title: கோவை வடக்கில் வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார் என்று பரவும் கருத்துக்கணிப்பு உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False

Leave a Reply