ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள் என்று பரவும் வீடியோ உண்மையா? 

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள்’’, என்று பரவும் வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிரப்படுகிறது.

Facebook Claim Link l Archived Link 

2020ம் ஆண்டு முதலாகவே, இந்த வீடியோ பகிரப்படுவதைக் கண்டோம்.  

Sharechat Link I Archived Link 


உண்மை அறிவோம்: 

குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, நாம் கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது ஒரு எடிட் செய்த வீடியோ என்று தெரியவந்தது. 

எனவே, பிரிட்டனில் 2014ம் ஆண்டு நடைபெற்ற டிவி நிகழ்ச்சி ஒன்றை எடுத்து, எடிட் செய்து, ராமாயண பாடல் சேர்த்து இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமன்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Altered