‘‘மக்கள் எனக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் Mr. Drugs நிதி’’ என்று உதயநிதி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

சன் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’மக்கள் எனக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் ‘Mr. Drugs நிதி – உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று தகவல் தேடினோம். அப்போது சன் நியூஸ் இதே டெம்ப்ளேட்டில் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றை கண்டோம்.

இதில், ‘’தேர்தல்PUNCH, பிரதமர் மோடிக்கு நான் வைத்திருக்கும் செல்லப்பெயர் ‘Mr. 28 பைசா - உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்’’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது.

இதனையே எடிட் செய்து மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெரியவருகிறது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி, சன் நியூஸ் பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…


Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘என்னுடைய செல்லப் பெயர் Mr. Drugs நிதி’ என்று உதயநிதி கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Altered