எதற்கு ஆட்சி மாற்றம் தேவை என்று நடிகர் சிலம்பரசன் கேட்டாரா?

அரசியல் சார்ந்தவை | Political

‘‘மாற்றம் தேவையில்லை’’ என்று நடிகர் சிலம்பரசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ எதுக்கு மாற்றம் வேணும் நல்லா தானே இருக்கு 🖤❤️

அணில் குட்டிக கதற போகுதுங்க 😂,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் எதுக்கு மாற்றம், நல்லதானே போயிட்டு இருக்கு, என்று நடிகர் சிலம்பரசன் பேசும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2016ம் ஆண்டு வெளியான செய்தி, என்று தெரியவந்தது. 

இதன்படி, கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவின்போது நடிகர் சிலம்பரசன் அப்போதைய அதிமுக ஆட்சிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். 

இந்த வீடியோவை எடுத்து, புதியது போன்று குறிப்பிட்டு, தற்போதைய 2026 சட்டமன்ற தேர்தலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள் என்று தெளிவாகிறது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ, 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Result Stamp

Title: எதற்கு ஆட்சி மாற்றம் தேவை என்று நடிகர் சிலம்பரசன் கேட்டாரா?

Written By: Pankaj Iyer

Result: False

Leave a Reply