‘‘சீமானுடன் விஜி அண்ணி பற்றி அனல் பறக்கும் கேள்விகள்’’, என்று ஆதன் தமிழ் மாதேஷ் ட்வீட் வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Tweet Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதன் ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்ட ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ காரணமாக, டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் கிஷோர் கே ஸ்வாமி, உமா மகேஷ்வரன், ‘ஆதன் தமிழ்’மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, ராஜவேல் நாகராஜன், ரவீந்திரன் துரைசாமி, முக்தார் போன்றோர் சர்ச்சையில் சிக்கினர்.

இதைத்தொடர்ந்து, மாதேஷ் பெயரில் ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால், அவை பலவும் மாதேஷ் பெயரில் செயல்படும் ஃபேக் ஐடி ஒன்று வெளியிட்டதாகும். இதுதொடர்பாக, நாம் கூட சில ஃபேக்ட்செக் கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2

இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து, மாதேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

https://twitter.com/Madeshjournali1/status/1638484705824886784

அதன் பிறகு, சில மாத இடைவெளி விட்டு தற்போது மீண்டும் மாதேஷ் தனது பணிக்குத் திரும்பியுள்ளார். அவர், சீமானுடன் நேர்காணல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், குறிப்பிட்ட வீடியோவில், சீமானுக்கும், நடிகை விஜயலஷ்மிக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி பேசியதாக, மாதேஷ் தெரிவித்தார் என்று குறிப்பிட்டு மேற்கண்ட வகையில் ட்வீட் பகிர்ந்துள்ளனர். உண்மையில், அவர் அவ்வாறு எங்கேயும் கூறவில்லை. அவரது ட்விட்டர் பக்கத்தில் எந்த பதிவும் இதுதொடர்பாகக் காணக் கிடைக்கவில்லை.

அடுத்தப்படியாக, நாம் ஆய்வு செய்யும் பதிவை வெளியிட்டது மாதேஷ் பெயரில் செயல்படும் ஒரு போலியான ஐடி ஆகும்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் உண்மையானதல்ல என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.


முடிவு
:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘சீமானுடன் விஜி அண்ணி பற்றி அனல் பறக்கும் கேள்விகள்’ என்று ஆதன் தமிழ் மாதேஷ் ட்வீட் வெளியிட்டாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False