ஆக்டோபஸ் சாப்பிடும் இந்த பெண் சீனாவை சேர்ந்தவரா? உண்மை அறிவோம்!

Coronavirus சமூக ஊடகம்

‘’சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியது,’’ என்ற தலைப்பில், பெண் ஒருவர் ஆக்டோபஸ் மீனை பச்சையாகப் பிடித்து சாப்பிடும் வீடியோவை சமூக ஊடகங்களில் சிலர் பகிர்கின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த வீடியோவில், பெண் ஒருவர் ஆக்டோபஸ் மீன்களை பிடித்து உயிருடன் சாஸ் தடவி சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது,’ என்று எழுதியுள்ளதால், இது உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சீனாவில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக, கொரோனா வைரஸ் (Covid 19) தொற்று பரவிவருகிறது. சீனா மட்டுமின்றி இது தற்போது உலக அளவில் பரவி, அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. உலக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்சமயம் சீனாவில் ஓரளவு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் படிப்படியாக அன்றாட வாழ்வை தொடங்கியுள்ளனர். இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்புவதால், இதில் இருப்பவர் சீனாவை சேர்ந்த பெண்ணா என்ற சந்தேகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். 

இதன்படி, மேற்கண்ட வீடியோவில் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து Yandex இணையதளத்தில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுதொடர்பாக, நிறைய லிங்குகள் கிடைத்தன.

பச்சையாக ஆக்டோபஸ் சாப்பிடும் சவால் தொடர்பான வீடியோ இது என்று தெளிவாகிறது. இருந்தாலும், இதன் உண்மையான வீடியோ லிங்க் கிடைக்கவில்லை. இதையடுத்து, வேறு சில கீவேர்ட் பயன்படுத்தி தேடினோம். அப்போது இதுபற்றிய விவரம் கிடைத்தது. 

இந்த வீடியோவில் இருக்கும் பெண் Ssoyoung என்ற பெயரில் யூடியுப் சேனல் நடத்தி வருகிறார். அந்த பெண் இதுபோன்ற சில அசாத்தியமான உணவுச் சவால்களை செய்து, அதனை வீடியோவாக யூடியுப்பில் பதிவேற்றுவது வழக்கம். ரொம்ப முக்கியமாக, இவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர் ஆவார். சீனப் பெண் அல்ல. 

Koreaboo.com LinkArchived Link 
Plantbasednews.com LinkArchived Link
10daily.com LinkArchived Link

இந்த வீடியோவை அவரது யூடியுப் பக்கத்திலேயே சென்று தேடி கண்டுபிடித்தோம். 


அந்த வீடியோவை அவர் கடந்த 2019ல் எடுத்திருந்தாலும், செப்டம்பர் மாதம் தனது யூடியுப் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். கீழே அதற்கான லிங்க் தரப்பட்டுள்ளது.

Archived Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 2019ம் ஆண்டில் கொரியாவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை சீனாவுடன் தொடர்புபடுத்தி தவறான தகவலை பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ஆக்டோபஸ் சாப்பிடும் இந்த பெண் சீனாவை சேர்ந்தவரா? உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •