கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது: ஃபேஸ்புக் செய்தியால் பரபரப்பு

அரசியல் சமூக ஊடகம்

‘’திருவாரூர் மாவட்டத்தை பல பாகங்களாக பிரிக்க உள்ளனர். இதில், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை அறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்கள் இதோ…

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\kumbakonam 2.png

Facebook Link I Archived Link

Thiruvarur pasanga da என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை ஜூலை 9, 2019 அன்று வெளியிட்டுள்ளது. புதிதாக மாற்றியமைத்து அமையவுள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதன் உட்பிரிவுகள் என்று கூறி, அதன் கீழே, அட்டவணை போல, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டிணம் மற்றும் கும்பகோணம் ஆகிய மாவட்டங்களின்கீழ் வரும் பகுதிகள் எனக் குறிப்பிட்ட ஊர்களின் பெயரை பட்டியலிட்டுள்ளனர். இதனை பார்த்தால் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டதைப் போல உள்ளது. இதேபோல, கொள்ளிடம், மதுக்கூர், முத்துப்பேட்டை போன்றவை புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட உள்ளதாகவும், திருவாரூர் மாவட்டம் பல பகுதிகளாக பிரிய போகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
முதலில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் எத்தனை, அவை யாவை என்று விவரத்தை தெரிந்துகொள்ளலாம். இதன்படி, தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், இவர்கள் குறிப்பிடுவதைப் போல கும்பகோணம் மாவட்டமாக இல்லை. அதேசமயம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகியவை ஏற்கனவே மாவட்டங்களாக உள்ளன. இதுபற்றி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\kumbakonam 3.png

இதுபற்றி விக்கிப்பீடியா தகவல் ஆதாரமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழகத்தில் மொத்தம் 301 தாலுக்கா பகுதிகள் உள்ளன. இதில், இவர்கள் குறிப்பிடும் கொள்ளிடம், மதுக்கூர், முத்துப்பேட்டை எதுவும் தாலுகா கிடையாது.

இதேபோல, இவர்கள் குறிப்பிடும் கும்பகோணம் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தின்கீழ் ஒரு சிறப்பு நிலை முனிசிபாலிட்டி நகராக, தாலுகா பகுதியாக மட்டுமே உள்ளது.

ஒருவேளை கும்பகோணத்தை தனி மாவட்டமாக உருவாக்குவதாகக் கூறி, ஏதேனும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளதா என சந்தேகத்தின் பேரில், கூகுளில் தகவல் ஆதாரம் தேடினோம். அப்போது, தி இந்து தமிழ் இது பற்றி வெளியிட்ட ஒரு செய்தி விவரம் கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\kumbakonam 4.png

அதாவது, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு, தனி வருவாய் மாவட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடப் போவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன்பேரில், சம்பந்தப்பட்ட கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனை தொடர்புகொண்டு, தி இந்து தமிழ் விளக்கம் கேட்டுள்ளது. அப்படி எந்த அறிவிப்பும் தற்போதைக்கு வெளியாக வாய்ப்பில்லை என அவரும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\kumbakonam 5.png

கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படவிருந்தால், இதுபற்றி அரசு தரப்பிலோ அல்லது ஊடகங்களிலோ அல்லது சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தரப்பிலோ உரிய விளக்கம் தரப்பட்டிருக்கும். அப்படி யாரும் எதுவும் கூறவில்லை. சம்பந்தப்பட்ட கும்பகோண சட்டமன்ற உறுப்பினரும் இதனை மறுத்துவிட்டார். எனவே, இந்த வதந்தியை யாரும் உண்மை என நம்ப வேண்டாம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது: ஃபேஸ்புக் செய்தியால் பரபரப்பு

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •