FactCheck: செந்தில் பாலாஜி பற்றி பேசியதை பாஜக அண்ணாமலை மறுத்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பாஜக கரூர் தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பற்றி பேசியதை மறுத்தார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இந்த தகவலை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர்.

இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை, திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜியை மிதிக்கனும் என்று கூறி பேசியதாக, ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

அவரது பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tamil Samayam LinkIndian Express Tamil Link 

இந்நிலையில்தான், மேற்கண்ட நியூஸ் கார்டு பகிரப்படுகிறது. நியூஸ்7 தமிழ் லோகோவுடன் பகிரப்பட்டுள்ளதால், இதனைப் பலரும் உண்மை என்று நம்புகின்றனர்.

எனவே, இப்படி அண்ணாமலை எங்கேனும் பேசினாரா என்று தகவல் தேடியபோது, தொடர்புடைய செய்தி எதுவும் காண கிடைக்கவில்லை. இதற்கடுத்தப்படியாக, நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’வழக்கம்போல எங்களது பெயரில் பகிரப்படும் வதந்தியே இந்த நியூஸ் கார்டு,’’ என்று அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:செந்தில் பாலாஜி பற்றி பேசியதை பாஜக அண்ணாமலை மறுத்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply