
ஊடகவியலாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான விக்ரமனை மிக மோசமாக விமர்சித்து புதிய தலைமுறை வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்று பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சமூக வலைதளம் வாயிலாக பழகிய ஆண்களை படுக்கைக்கு அழைத்ததாக ஊடக நெறியாளரும் விசிக பிரமூகருமான விக்ரமன் மீது பகிரங்க குற்றச்சாட்டு.! விக்ரமன் மீது தொடரும் சர்ச்சை!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை K.J. Parthipan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஊடக நெறியாளராக இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர் விக்ரமன். பா.ஜ.க-வுக்கு எதிராக கருத்துக்களைக் கூறுபவர் என்பதால் அவரை பா.ஜ.க-வினரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் ஆண் நண்பர்களைப் படுக்கைக்கு அழைத்தார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டு டிசைன் மற்றும் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. பிரமுகர் என்பதை பிரமூகர் என்று குறிப்பிட்டிருந்தனர். இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.
ஏப்ரல் 20ம் தேதி விக்ரமன் தொடர்பாக ஏதேனும் நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று பார்த்தோம். அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. விக்ரமன் மீது இப்படி ஏதும் புகார் போலீசில் அளிக்கப்பட்டுள்ளதா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படியும் எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரை தொடர்புகொண்டு கேட்டோம். அவர் “இந்த நியூஸ் கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியாக யாரோ புதிய தலைமுறை நியூஸ் கார்டை பயன்படுத்தி வெளியிட்டுள்ளனர்” என்று கூறினார். தங்களை தொடர்ந்து விமர்சித்து வரும் விக்ரமனை எதுவும் செய்ய முடியாத சூழலில், அவரை அசிங்கப்படுத்தும் நோக்கில் மிகவும் ஆபாசமான முறையில் போலியான நியூஸ் கார்டை உருவாக்கி பரப்பி வருவது தெரிந்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் செய்தியாளர் விக்ரமன் தொடர்பாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஊடகவியலாளர் விக்ரமன் தொடர்பாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:விக்ரமன் பற்றி புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் போலி நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
