FactCheck: முதல்வர் பதவிக்கு தயார் என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’முதல்வர் பதவிக்கு தயார் – எச்.ராஜா,’’ என்று எச்.ராஜா பேசியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், எச்.ராஜா பெயரை குறிப்பிட்டு ஐபிசி தமிழ் ஊடகம் வெளியிட்டதைப் போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற தேர்தல் நேரம் என்பதால், நாளுக்கு நாள், அரசியல் தலைவர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் எதிர்க்கட்சியினர் புதுப்புது வதந்திகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படியே, மேற்கண்ட நியூஸ் கார்டும் பகிரப்பட்டதாக தெரிகிறது.

முதலில், நாம் இதுபற்றி எச்.ராஜாவின் மருமகன் தரப்பில் விளக்கம் கேட்டோம். இதனைப் பார்வையிட்ட அவர்கள், இப்படி எங்கேயும் அவர் பேசவில்லை எனக் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, எச்.ராஜா சார்ந்து பாஜகவின் அதிகாரப்பூர்வ மறுப்பு பெற முயற்சித்தோம். இதன்படி, பாஜக தமிழ்நாடு ஐடி பிரிவு தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் விளக்கம் கேட்டோம். அவர் ‘’இது போலியாக உருவாக்கப்பட்ட செய்தி,’’ எனக் கூறினார்.

எனவே, எச்.ராஜா முதல்வர் பதவிக்குத் தயார் என்று கூறியதாகப் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:முதல்வர் பதவிக்கு தயார் என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •