மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும்; ஆனால் அவர்களுக்கு இந்தி புரியாது என்று அண்ணாமலை கூறினாரா?
‘’மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும். ஆனால், அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் பேசியும் பயனில்லாத நிலை ,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
சமீபத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, ‘’மோடி பேசினால், அமெரிக்கா வரை கேட்கும், 2009ல் மோடி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது; ஈழத்தமிழரின் வாழ்வில் மாற்றம் வந்திருக்கும்,’’ என்று பேசியிருந்தார். இந்த பேச்சு பல்வேறு தரப்பிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், மேற்கண்ட வகையில் சிலர் தந்தி டிவி லோகோ சேர்த்து வதந்தி பரப்பி வருகிறார்கள். இது உண்மையான செய்தியல்ல.
தந்தி டிவி வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே தரப்பட்டுள்ளது.
இதனை வேண்டுமென்றே எடிட் செய்து, மோடி மற்றும் அண்ணாமலையை கிண்டல் செய்யும் நோக்கில், சிலர் வதந்தி பரப்ப, மற்றவர்கள் உண்மை என நம்பி அதனை ஷேர் செய்து வருகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும்; ஆனால் அவர்களுக்கு இந்தி புரியாது என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered