தாம்பரம் மேயரின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டினாரா மு.க. ஸ்டாலின்?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணனின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஏபிபி நாடு என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு ” திராவிட மாடல் ” என பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை  Soundar Rajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 29ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியின் குழந்தைக்கு சமீபத்தில் திராவிட அரசன் என்று பெயர் சூட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், திராவிட மாடல் என்று பெயர் சூட்டினார் என ஏபிபி நாடு செய்தி அட்டை வெளியிட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது எடிட் செய்யப்பட்டது போல உள்ளது என்பதால் இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரியின் மகனுக்கு பெயர் சூட்டியது தொடர்பான செய்தியை எடுத்தோம். அதில் திராவிட அரசன் என்று இருந்தது. அடுத்தது ஏபிபி நாடு வெளியிட்ட நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். அதிலும் கூட திராவிட அரசன் என்றே இருந்தது. இதன்மூலம் இந்த நியூஸ் கார்டை எடிட் செய்திருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள ஏபிபி நாடு நிர்வாகிக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டுள்ளது என்று உறுதி செய்தார்.

Archive

இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று மு.க.ஸ்டாலின் பெயர் வைத்தார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதியானது.

முடிவு:

தாம்பரம் மாநகராட்சி மேயரின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார் என்று பரவும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தாம்பரம் மேயரின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டினாரா மு.க. ஸ்டாலின்?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply