FACT CHECK: மாஸ்க் போட்டு சாப்பிடுவது போல ராகுல் போஸ் கொடுத்தாரா?- விஷம பதிவு

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மாஸ்க் போட்டு ராகுல் காந்தி சாப்பிடுவது போல் புகைப்படம் எடுத்ததாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ராகுல் காந்தி உணவு விருந்து ஒன்றில் மாஸ்க் போட்டு அருகில் அமர்ந்திருந்த பெண்களுடன் பேசும் புகைப்படமும் தமிழ் திரைப்பட காட்சி ஒன்றும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லக்கினத்தில் ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்…. ஒருவன்… மாஸ்க்  போட்டும் சாப்பிடலாம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Salai Ganesh Kumar R என்பவர் 2020 ஜனவரி 24ம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பொது மக்களுடன் சந்திப்பு, கலந்துரையாடல் என்று அவருடைய பயணத் திட்டம் அனைவராலும் கவனிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்தி உணவு அருந்தும் போது மாஸ்க் போட்டு அமர்ந்திருந்தார் என்பது போலவும், உணவு அருந்துவது போல போஸ் கொடுத்தார் என்ற அர்த்தத்தில் சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் ராகுல் காந்தி உணவு உட்கொண்டாரா, அல்லது போட்டோவுக்கு போஸ் கொடுத்தாரா என்று ஆய்வு செய்தோம்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பலரும் இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தனர். ராகுல் காந்தி மாஸ்க் கழற்றி வைத்துவிட்டு சாப்பிடுவதும், பிறகு மாஸ்க் போட்டுவிட்டுப் பேசும் காட்சியையும் புகைப்படமாக வைத்திருந்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I twitter.com I Archive 2

எனவே, அவர் சாப்பிடுவது போல வீடியோ உள்ளதா என்று பார்த்தோம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில் அருகில் இருந்தவர்களுடன் ராகுல் காந்தி பேசிய பிறகு, இலையை மூடும் காட்சி இருந்தது. ஆனால், ராகுல் காந்தி சாப்பிடுவது போன்ற காட்சி இல்லை.

Archive

எனவே, வேறு வீடியோ கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது வசந்த் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த யூடியூப் வீடியோ கிடைத்தது. அதில், ராகுல் காந்தி உணவு அருந்தும் காட்சி மிகத் தெளிவாக இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப் பணயம் செய்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் மாஸ்க் போட்டுக்கொண்டு சாப்பிடுவது போல ராகுல் காந்தி நடித்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராகுல் காந்தி மாஸ்க் போட்டுக்கொண்டு சாப்பிடுவது போல நடித்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மாஸ்க் போட்டு சாப்பிடுவது போல ராகுல் போஸ் கொடுத்தாரா?- விஷம பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •