‘உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலத்தின் புகைப்படம்,’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

‘’உத்திரபிரதேசத்தில் நாளை திறக்க உள்ள பாலம்.

யோகிடா.🔥🔥’’ என்று குறிப்பிட்டு மேற்கண்ட பதிவை KarthikGnath420 என்ற ட்விட்டர் ஐடி கடந்த நவம்பர் 30, 2022 அன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை வாசகர் ஒருவர் உண்மையா, என்று நம்மிடம் வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) சந்தேகம் கேட்டதன் பேரில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

உண்மை அறிவோம்:
இந்த ட்வீட்டின் நம்பகத்தன்மை பற்றி பார்க்கும் முன்பாக, அதன் கீழே பகிரப்பட்டுள்ள கமெண்ட்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டோம். சிலர் இந்த ட்வீட்டை உண்மை என நம்பி இதனை பகிர்ந்துள்ள நபர் பாஜக ஆதரவாளர் என்று கூறி விமர்சிப்பதையும், சிலர் ஆதரிப்பதையும் காண முடிகிறது.

இந்த ட்வீட்டில் உள்ள புகைப்படம், சீனாவில் எடுக்கப்பட்டதாகும். அந்த பாலத்தின் பெயர் Qianchun Interchange Guiyang. கூடுதல் விவரத்திற்கு கீழே உள்ள வீடியோ பார்க்கவும்.


அடுத்தப்படியாக, இந்த ட்வீட்டை வெளியிட்ட ஐடி உண்மையிலேயே பாஜக ஆதரவாளர் ஐடி.,யா என்று பார்த்தால், இல்லை என தெரியவருகிறது. ஆம். இது, பாஜக ஆதரவாளர் Karthik Gopinath என்பவரையும், அண்ணாமலை ஆதரவாளர்களையும் கேலி செய்யும் வகையில் தொடங்கப்பட்ட ஒரு parody account ஆகும்.

இந்த விவரம் தெரியாமலேயே பாஜக ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என இரு தரப்புமே, இந்த ட்விட்டர் ஐடி பகிரும் பதிவுகளை உண்மை என நம்பி கமெண்ட் பகிர்வதும், ஷேர் செய்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் பற்றிய பதிவு நகைச்சுவை நோக்கில் பகிரப்பட்டாலும், அதனை மற்றவர்கள் உண்மை என நம்பி, ஷேர் மற்றும் கமெண்ட் செய்வதால், ‘இது தவறான தகவல்’ என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலம் இதுவா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING